ஏப்ரல் 09: முத்துப்பேட்டை பேரூராட்சி 18 வார்டுகள் கொண்ட பகுதியாகும். இங்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டமக்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளில் இந்த பேரூராட்சியில் செயல் அலுவலர் நிரந்தமாகவும், நீண்ட நாட்களும் பணியாற்றுவது கிடையாது. சமீபத்தில் இங்கு பணியாற்றிய செயல் அலுவலர் நாகராஜ் என்பவர் மர்மமான முறையில் இறந்தார். ஒரு செயல் அலுவலர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். அதே போல் இந்த பேரூராட்சிக்கு வரும் பல செயல் அலுவலர்களுக்கு உடல் நிலை குறைவு, விபத்துகளால் பாதிப்பு மற்றும் மன அழுத்தம் ஏற்படுவதால் வரும் பல செயல் அலுவலர்கள், உயர் அதிகாரிகளை பார்த்து இடம் மாற்றம் பெற்று சென்று விடுகின்றனர்.
அதனால் முத்துப்பேட்டை பேரூராட்சியில் செயல் அலுவலர் பதவி அடிக்கடி காலி இடமாக உள்ளது. இதனால் கடந்த 5 ஆண்டுகளாக முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில் சொல்லும் அளவிற்கு எந்த பணியும் நடக்கவில்லை. இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் பேரூராட்சியில் புதிய செயல் அலுவலராக குலோத்துங்கன் பொறுப்பேற்றார். அவர் வந்த நாளிலிருந்து இங்கு பணியாற்றி சென்ற மற்ற அலுவலர்கள் போல் அடிக்கடி விடுமுறை எடுப்பதால் அலுவலகத்திற்கு சரி வர வருவது கிடையாது. தற்போது ஒரு மாதம் விடுமுறையில் உள்ளார்.
இதனால் பணிகள் பாதிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து பேரளம் பேரூராட்சியில் செயல் அலுவலராக பணிபுரியும் செந்தில் என்பவரை கூடுதலாக முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு பொறுப்பு செயல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு வந்த செயல் அலுவலர் செந்திலை பேரூராட்சி அலுவலர்கள் வரவேற்றனர். பின்னர் அவர் பொறுப்பேற்றார்.
No comments:
Post a Comment