முத்துப்பேட்டை பகுதியில் ஆளில்லா குட்டி விமானங்கள் பறந்தால் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Saturday, April 9

முத்துப்பேட்டை பகுதியில் ஆளில்லா குட்டி விமானங்கள் பறந்தால் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.



ஏப்ரல் 09: முத்துப்பேட்டை பகுதியில் ஆளில்லா குட்டி விமானங்கள் பறந்தால் காவல்துறைக்கு தகவல் தர வேண்டுமென பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. முத்துப்பேட்டை காவல் துறை சார்பில் பழைய பேருந்து நிலையம், மண்ணை சாலை, குமரன் பஜார், ஆட்டோ ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், பயணிகளிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை இன்ஸ்பெக்டா் (பொறுப்பு) ஜோதி முத்து ராமலிங்கம் தலைமையில் போலீசார் வழங்கினர். 
இதில் ஆளில்லா குட்டி விமானங்கள் விண்ணில் பறக்க அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. விண்ணில் பறந்தாலோ, கீழே விழுந்து கிடந்தாலோ காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதே போல் சந்தேக நபர்கள், தெரிந்த நபர்கள் யாரேனும் குட்டி விமானங்களை இயக்குவது தெரிந்தாலும், அதன் மூலம் படம் எடுத்தாலும், திருவிழா மற்றும் இதர பணிகளுக்கு பயன்படுத்தினாலும் காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். இது குறித்து தகவல் தெரிவிக்க 155226 என்ற இலவச தொலைப்பேசி எண்ணுக்கோ அல்லது அப்பகுதி காவல்நிலையத்துக்கோ பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டுமென துண்டு பிரசுரத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here