டிசம்பர் 01:முத்துப்பேட்டை ரஹ்மத் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஓவியம் மற்றும் கைவினைப்பொருள்கள் கண்காட்சி 1.12.12 காலை 10 மணியளவில் துவங்கியது. கண்காட்சியினை திரு. ஆர். சண்முகம் – ஓவிய ஆசிரியர் – அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், கோ. அருணாச்சலம் – பேரூராட்சி மன்ற தலைவர், டாக்டர். இளங்கோ, மாணிக்கம் – தினந்தந்தி நாளிதழ் நிருபர், நா. ராசமோகன் – முத்துப்பேட்டை வெற்றி தமிழர் பேரவை தலைவர், சி. செல்லத்துரை – தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் மற்றும் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.
பள்ளி மாணவிகளின் கை திறனில் உருவான ஓவியம் மற்றும் கைவினைப்பொருட்களை கொண்டு செய்து இருந்த அனைத்தும் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. SPKM தெருவை சார்ந்த N.சுமையா நிஷா ஐந்தாம் வகுப்பு (தந்தை பெயர் V.M.S நெய்னா முகமது) கை திறனில் உருவாக்கிய கைவினைப்பொருட்கள் மற்றும் புதுத்தெருவினை சார்ந்த அ. ஆயிஷா பாத்திமா மூன்றாம் வகுப்பு ”பி” பிரிவு (தந்தை பெயர் எஸ.அமீருதீன்) அனைத்து நாட்டு பணங்கள், நாணயங்கள், சோழர் காலத்து நாணயங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கண்காட்சியினை துவக்கி வைத்து பேசிய, ஓவிய ஆசிரியர் – திரு. ஆர். சண்முகம் கண்காட்சியினை பற்றி கூறுகையில், மாணவிகளின் திறமைகள் மதிப்புக்குரியது. நான் கலந்துக்கொண்ட கண்காட்சியில் என்னை மிகவும் கவர்ந்ததும், மற்றும் மிக பிரமாண்டமான கண்காட்சியாகவும் இது அமைந்துள்ளது. மாணவிகளை ஊக்குவித்த இப்பள்ளியின் ஓவிய ஆசிரியை திருமதி. செல்வி கணேசன், பள்ளி முதல்வர் ஆர். சகுந்தலா மேடம் மற்றும் ஆசிரியை பெருந்தகைகள் அனைவருக்கும் எனது பாராட்டுதலை மற்றும் வாழ்த்துகளை கூறிக்கொள்கிறேன் மற்றும் மாணவிகள் தாங்களின் திறமைகளை திறன்பட செய்து இருக்கிறார்கள் என்பதும் பாராட்டுக்குரியது என்றார்.
இறுதியில் வகுப்பு வாரியாக முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

NEWS PARTNER MUTHUPET.ORG
No comments:
Post a Comment