முத்துப்பேட்டை பேரூராட்சி குப்பைகிடங்கில் 2 நாளாக எரிந்து கொண்டி தீ அணைக்கப்பட்டது. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Saturday, April 9

முத்துப்பேட்டை பேரூராட்சி குப்பைகிடங்கில் 2 நாளாக எரிந்து கொண்டி தீ அணைக்கப்பட்டது.


ஏப்ரல் 09: முத்துப்பேட்டை பேரூராட்சி குப்பைகிடங்கில் 2 நாளாக எரிந்து கொண்டி தீ அணைக்கப்பட்டது.
முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு ஆலங்காடு சுடுகாடு அருகே உள்ளது. இங்கு தான் 18 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது. இங்கு கொட்டப்படும் குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் சமீபகாலமாக தனித்தனியாக பிரிப்பது கிடையாது. இதனால் உரம் தயாரிக்கும் பணியையும் செய்வது கிடையாது. மேலும் இந்த குப்பைகளை பேரூராட்சி பணியாளர்கள் அவ்வபோது கொளுத்தி விடுவர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளுக்கு பேரூராட்சி பணியாளர்கள் சிலர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதனால் சாலையில் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் தெரியாத அளவுக்கு ஒரே புகைமண்டலமாக காட்சியளித்தது. நேற்று முன் தினம் மாலை வரை முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி தீயணைப்பு வீரர்கள் போராடி தீயைஅணைத்தனர்.
இதையடுத்து இரவு முழுவதும் விடிய விடிய பல முறை தீயணைப்பு வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து தொடர்ந்து நேற்று காலை வரை தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்போது இடைவிடாமல் தீயணைப்பு பணியில் ஈடுபட்டதால் முத்துப்பேட்டை தீயணைப்பு வாகனம் பழுதடைந்தது. பின்னர் கடைசி நேரத்தில் அருகில் உள்ள வெள்ள குளத்திலிருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து தீயை அணைத்தனர்.
பிறகு பேரூராட்சி மூலம் ஜேசிபி இயந்திரம் கொண்டு அணைக்கப்பட்ட குப்பைகளை அருகில் இருந்த காலி இடத்துக்கு குப்பைகளை மாற்றியமைக்கும் பணி நடக்கிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here