முத்துப்பேட்டை மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்காக கொடுவா மீன் அதிகளவு வந்து கொண்டிருக்கிறது. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Tuesday, April 5

முத்துப்பேட்டை மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்காக கொடுவா மீன் அதிகளவு வந்து கொண்டிருக்கிறது.





ஏப்ரல் 05: முத்துப்பேட்டை மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்காக கொடுவா மீன் அதிகளவு வந்து கொண்டிருக்கிறது.
முத்துப்பேட்டை கடற்பகுதியில் நல்லருசி கொண்ட கொடுவா மீன்கள் அதிகளவு இனவிருத்தி ஆகிறது. ஆனால் இந்த மீன்கள் அருகில் உள்ள கோடியக்கரை, வேதாரண்யம், தோப்புத்துறை பகுதிகளில் மீனவர்கள் வலையில் சிக்குகிறது. அந்த பகுதிகளில் இருந்து முத்துப்பேட்டை ஆசாத் நகர் மற்றும் பெரியகடைத் தெரு மீன் மார்க்கெட்டுக்கு அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
சமீப காலமாக இப்பகுதிக்கு கொடுவாமீன்கள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஆனால் விலை குறையவில்லை. கிலோ 450 முதல் 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஒரு சிறிய மீன் 10 கிலோ வரையிலும், பெரிய மீன் 25 முதல் 50 கிலோ வரை உள்ளது. மீன் பெரிதாக இருந்தால் ருசி அதிகமாக இருக்கும். கொடுவா மீன் அதிக ருசி கொண்டது என்பதால் மீன் பிரியர்கள் பல பகுதிகளிலிருந்து முத்துப்பேட்டை மீன் மார்க்கெட்டிற்கு வந்து வாங்கி செல்கின்றனர்.
இது குறித்து பெரியகடைத்தெரு மீன் வியாபாரி சாரிப் கூறுகையில், அதிகளவில் ருசி கொண்ட இப்பகுதி கொடுவா மீனுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அதிக மவுசு உண்டு. தற்பொழுது கொடுவா மீன்களின் வரத்து அதிகமாக உள்ளது. ஆனால் விலை குறையவில்லை. தற்பொழுது கிலோ ரூ.500க்கு விற்பனை செய்து வருகிறோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here