பிப்ரவரி 04: முத்துப்பேட்டை அருகே நண்பனுடன் தங்கை ஓட்டம். மனம் உடைந்த ஆட்டோ டிரைவர் தூக்கிலிட்டு தற்கொலை. போலீசுக்கு தெரியாமல் உடலை புதைத்ததால் 50 பேர் மீது வழக்கு.
முத்துப்பேட்டை அடுத்த சித்தமல்லி ஏ.கே.எஸ். நகரில் வசிப்பவர் ஜீவானந்தம். இவரது மகன் பாலமுருகன்(20) ஆட்டோ டிரைவரான இவரும் அருகில் உள்ள பெருகவாழ்ந்தான் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் மகன் உதயசந்திரன்(20) என்பவரும் இணைப்பிரியாத நண்பர்களாக பழகி வந்தனர். இதனால் பாலமுருகன் வீட்டுக்கு உதயசந்திரன் அடிக்கடி வந்து செல்வார். அப்பொழுது 12-ம் வகுப்பு படித்து வந்த பாலமுருகனின் தங்கைக்கும் உதயசந்திரனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதனையடுத்து சில தினங்களுக்கு முன்பு உதயசந்திரனும் பாலமுருகனின் தங்கையும் வீட்டை விட்டு ஓடிவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பாலமுருகனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பாலமுருகனிடம் நீ அவனை வீட்டுக்கு அடிக்கடி அழைத்து வந்தனால் தான் இந்த சம்பவம் ஏற்பட்டது. இதற்கு காரணம் நீதான் என்று கூறி கண்டித்துள்ளனர். இதனால் பெரும் மன உலைச்சல் அடைந்த பாலமுருகன் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத பொழுது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பாலமுருகனின் தந்தை ஜீவானந்தம் மற்றும் உறவினர்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் அவரின் உடலை அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்துவிட்டனர். இந்த தகவலை அறிந்த கிராம நிர்வாக அலுவலர்(பொருப்பு) ஞானசேகரன் பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் பாலமுருகனின் தந்தை ஜீவானந்தம் உட்பட 50 பேர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தகவல்: நிருபர் முகைதீன் பிச்சை
No comments:
Post a Comment