ஜனவரி 25: இந்திய தேர்தல் ஆணையம் இன்று 25–ந் தேதி 5–வது தேசிய வாக்காளர் தினத்தை நாடு முழுவதிலும் கொண்டாடிடவும் அதன் மூலமாக இந்த 5–வது தேசிய வாக்காளர் தினத்தின் குறிக்கோளான சுலபமான பதிவு, சுலபமான திருத்தம் என்பதனை பொது மக்களிடையே பரப்பி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் புதிதாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டைகள் வழங்கும் பணி அமுத்துப்பேட்டை புது தெரு ஊராட்சி ஒன்றிய நடு நிலை பள்ளியில் இன்று துவங்கியது.
மேலும் முத்துப்பேட்டையில் பிற பகுதிகளின் புதிய வாக்காளர்களுக்கு அந்தந்த வாக்குச்சாவடி மையங்கள் மூலம் அட்டைகள் விநியோகிக்கப்படும் என கூறப்படுகிறது. கடந்த 5–ந்தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் புதிதாக இடம் பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களும் அவரவர் வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
புதிய வாக்காளர் அடையாள அட்டையை காவல்துறை ஆய்வாளர் M.ராஜ் குமார் அவர்கள் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் முத்துப்பேட்டையை சார்ந்த பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
(முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு கொய்ய S.M. முஹம்மது தாவுத் மரைக்காயர் அவர்களால் 1912 ஆண்டு நிலம் தானமாக வழங்கப்பட்டது என்று அங்கு பதிந்திருக்கும் கல்வெட்டு மூலமாக காணகிடைத்தது)
தகவல்: KSH சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)
No comments:
Post a Comment