கடலூர் அருகே கார் மீது ஆம்னி பஸ் மோதி முத்துப்பேட்டை சார்ந்த இருவர் பலி. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Thursday, September 17

கடலூர் அருகே கார் மீது ஆம்னி பஸ் மோதி முத்துப்பேட்டை சார்ந்த இருவர் பலி.




செப்டம்பர் 17: முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் அரமங்காடு இறால் பண்ணை அதிபர் வி.என்.எஸ்.சி.நித்தியானந்தன் இறால்குஞ்சி வாங்குவதற்காக காரில் பாண்டிச்சேரி சென்றுவிட்டு திரும்பியபோது இன்று அதிகாலை கடலூர் அருகே விபத்து ஏற்பட்டது. கார் மீது ஆம்னி பஸ் மோதி அப்பளம் போல் நொருங்கி விபத்து ஏற்ப்பட்டது. இதில் காரை ஓட்டிய முத்துப்பேட்டை கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த டிரைவர் தினேஷ் குமார் மற்றும் ஜாம்புவானோடை வடகாடு பரமசிவம் ஆகியோர் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி பலியானார்கள். இதில் இறால் பண்ணை அதிபர் வி.என்.எஸ்.சி.நித்தியானந்தன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவல்:  நிருபர் மு.முகைதீன் பிச்சை

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here