முத்துப்பேட்டை அருகே இடுப்பில் வளரும் 5 கிலோ கட்டியுடன் அவதிப்படும் ஏழை மாணவி. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Thursday, September 17

முத்துப்பேட்டை அருகே இடுப்பில் வளரும் 5 கிலோ கட்டியுடன் அவதிப்படும் ஏழை மாணவி.




செப்டம்பர் 17: முத்துப்பேட்டை அருகே இடுப்பில் வளரும் 5 கிலோ கட்டியுடன் அவதிப்படும் ஏழை மாணவி. 

முத்துப்பேட்டை அடுத்துள்ள தம்பிக்கோட்டை கீழக்காடு ஏரிக்கரை சாலையில் வசிப்பவர் நல்லத்தம்பி இவரது மனைவி லலிதா. இருவரும் கூலித் தொழிலாளியான இவர்களுக்கு சரன்யா, ரம்யா ஆகிய இரண்டு மகள்கள். இதில் இரண்டாவது மகளான ரம்யா(20). கடந்த வருடம் முத்துப்பேட்டை கோவிலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். ரம்யா 4-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது இடுப்பின் பின் பகுதியில் கட்டி ஒன்று உருவானது.

இதனையடுத்து தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு ஆப்ரேஷன் மூலம் அகற்றப்பட்டது. பின்னர் தொடர்ந்து பள்ளிக்கு சென்ற ரம்யாவிற்கு 9-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது மீண்டும் அதே பகுதியில் ஒரு கட்டி உருவானது. அப்பொழுதும் அதே மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று அகற்றினார். இந்த நிலையில் கடந்தாண்டு பத்தாம் பகுப்பு படிப்பை துவங்கிய நேரத்தில் மீண்டும் ரம்யாவிற்கு அதே பகுதியில் கட்டி உருவானது. மருத்துவ உதவிப் பெற்று வந்த ரம்யாவின் பின்பகுதியில் நாளுக்கு நாள் கட்டியின் அளவு பெரியதாகிக் கொண்டே போனதால் நடக்கவும், உட்காரவும் சிரமம் ஏற்பட்டது.

இதனையடுத்து மீண்டும் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் ரம்யா சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர் ஆபத்தான வகையில் சுமார் 5 கிலோவிற்கு மேல் எடைக் கொண்ட கட்டியாக இருப்பதால் தனியார் மருத்துவ மனையில்தான் சிகிச்சை பெற்று அகற்ற வேண்டும் என்று அங்குள்ள டாக்டர்கள் கைவிரித்தனர்.

இதனையடுத்து அவரது பெற்றோர் ரம்யாவை அழைத்துக் கொண்டு தனியார் மருத்துவ மனையில் சேர்த்து டாக்டரிடம் ஆலோசனை நடத்தினர். இதில் ரம்யாவின் பரிதாப நிலையைக் கண்ட தனியார் மருத்துவர் அந்த கட்டியை அகற்ற குறைந்தது ரூபாய் 2 லட்சம் வரை செலவாகும் என்று கூறியுள்ளார். அந்த அளவு பணம் தோதுப்பன்ன முடியாத பெற்றோர் ரம்யாவை அழைத்துக் கொண்டு வீடுத்திருப்பினர். சுமார் 1 வருடமாக மருத்துவ செலவுக்கு பணம் சேகரிக்க முடியாமல் தவிக்கும் பெற்றோர்கள் மத்தியில் மருத்துவ உதவிக்கு ஏங்கும் மாணவி ரம்யாவின் இடுப்பு பகுதியில் உருவான கட்டி 5 கிலோவிற்கு மேல் வளர்ந்து கொண்டே செல்கிறது. தற்பொழுது அவரின் உடல் நிலை மிகவும் மோசமாகி கொண்டே வருகிறது. மாணவியின் கால், கைகள் மற்றும் உடலும் மெலிந்து ஆபத்தான நிலையில் இருக்கும் மானவி ரம்யா தனது இயற்கை உபாதைகளை தனியாக சென்று கழிக்கக்கூட முடியாத அளவில் சிரமம் படுகிறார். தினமும் சாப்பிடக்கூட முடியாத நிலையில் பசிப்பட்டினியோடு உயிருக்கு போராடி வரும் மானவி ரம்யாவை அவரது தாய் லலிதாதான் வேலைக்கு செல்லாமல் மாணவியுடன் இருந்து கவணித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த ஏழை மாணவியின் பரிதாப நிலையை தமிழக அரசு உணர்ந்து மாணவிக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் செய்து குணமாகி மீண்டும் மாணவி ரம்யா பள்ளிக்கு செல்ல வேண்டுமென்று அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

தகவல்: நிருபர் மு.முகைதீன் பிச்சை

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here