செப்டம்பர் 16: துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈதுல் அதா ஹஜ் பெருநாள் விடுமுறை அறிவிப்பு.
துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈதுல் அதா ஹஜ் பெருநாள் விடுமுறையை இன்று அமீரக அரசு வெளியிட்டுள்ளது. அதன் படி அரசுதுறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு வரும் செப்டம்பர் 23 புதன் கிழமை முதல் செப்பம்பர் 26 சனிக்கிழமை வரை இருக்கும் என்று செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை பணிகள் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தனியார் துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு செப்டம்பர் 23 புதன்கிழமை முதல் செப்டம்பர் 25 வெள்ளிக்கிழமை வரை விடுமுறை என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment