ஆகஸ்ட் 30: முத்துப்பேட்டையை சேர்ந்தவர் தொழில் அதிபர் கொய்யா. அப்துல்ரெஜாக், மூத்த கம்யூனிஸ்ட் பிரமுகரான இவர் சமீபத்தில் உடல் நலம் இன்றி காலமானார். இந்த நிலையில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் த.பாண்டியன் மறைந்த அப்துல் ரெஜாக் வீட்டிற்கு சென்று அங்கு இருந்த அவரது மகன்கள் கட்டி தாஜுதீன், சாதாத்பாட்சா, மூத்த மருமகன் முகம்மது இபுராஜிம் மற்றும் அவரது குடும்பத்தினரை சத்தித்து ஆறுதல் கூறினார். அப்பொழுது முன்னால் சட்ட மன்ற உறுப்பினர்கள் பழனிச்சாமி, சிவபுன்னியம், முன்னால் மாவட்ட ஊராட்சி தலைவர் வை.செல்வராஜ், ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான முருகையன், நகர செயலாளர் மார்க்ஸ் மற்றும் ஈனாகான நாசர் ஆகியோர் உடன் இருந்தனர்.
படம் செய்தி:
முத்துப்பேட்டை மறைந்த மூத்த கம்யூனிஸ்ட் பிரமுகர் அப்துல்ரெஜாக் வீட்டிற்கு சென்று குடும்பத்தினரை சந்தித்து மாநில செயலாளர் த.பாண்டியன் ஆறுதல் கூறினார்.
தகவல்: நிருபர் முகைதீன் பிச்சை



No comments:
Post a Comment