செப்டம்பர் : முத்துப்பேட்டையில் இன்று விநாயகர் ஊர்வலம் 2000 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில்.
ஜாம்புவானோடை ஊராட்சி தலைவர் சரவணன், அனைத்து கிராம கமிட்டி ஒருங்கிணைப்பு குழு தலைவர் சிவபிரகாசம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். சிதம்பரம் ராமஜெயம் அறக்கட்டளை நிறுவனர் ராமகிருஷ்ணன் ஊர்வலத்தை துவக்கி வைக்கிறார். இதில் சிறப்பு அழைப்பாளகளாக பா.ஜ.மாநில துணைத் தலைவர்கள் வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் பேட்டை சிவா ஆகியோர் கலந்துக் கொள்கின்றனர். ஊர்வலத்தில் உப்பூர் தில்லைவிளாகம், ஆலங்காடு உட்பட 19 பகுதிகளிலிருந்து விநாயகர் சிலைகள் எடுத்து வரப்படுகிறது. மதியம் 2 மணிக்கு துவங்கும் ஊர்வலம் ஜாம்புவானோடை வடக்காடு சிவன் கோவிலிருந்து புறப்பட்டு வைரான் சோலை, ஜாம்புவானோடை தர்கா மேலக்காடு, கோரை ஆற்றுப்பாலம் பகுதி வழியாக முத்துப்பேட்டை ஆசாத்நகர் சென்று அங்கிருந்து திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பேருந்து நிலையம், நியூ பஜார், கொய்யா முக்கம், பங்களாவாசல் வழியாக மாலை 6 மணிக்கு செம்படவன்காடு சென்று அங்குள்ள பாமினி ஆற்றில் கரைக்கப்படுகிறது. ஊர்வலத்தை முன்னிட்டு காவல் துறை, மாவட்ட வருவாய் துறை சார்பிலும் முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் எஸ்.பி.ஜெயசந்திரன், திருவாரூர் கலெக்டர் மதிவாணன் ஆகியோர் முத்துப்பேட்டையில் முகாமிட்டு ஆய்வு நடத்தி வருகிறன்றனர். மேலும் ஊர்வல பாதை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. ஊர்வலம் செல்லும் போது அதனை படம் பிடிக்க 100க்கும் மேற்பட்ட வீடியோ கேமராக்கள் பயன்படுத்த உள்ளன.
ஊர்வலம் செல்லும் பாதையில் ஆங்காங்கே தற்காலிக கோபுரங்கள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது. சாலையின் இரு புரங்களிலும் தடுப்பு வேலிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பேரிகார்டுகள் அமைத்து கூட்டத்தை கட்டுப்படுத்த உள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் கலவரத்தைத்தடுக்க ஆங்காங்கே கண்ணீர் புகை வாகனங்கள், வஜ்ரா வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. ஊர்வலத்தில் மத்திய மண்டல ஐ.ஜி. ராமசுப்பிரமணியன் தலைமையில் தஞ்சை டி.ஐ.ஜி, திருவாரூர் எஸ்.பி.ஜெயசந்திரன், தஞ்சை எஸ்.பி.தர்மராஜ், நாகை எஸ்.பி. அபினவ் மற்றும் திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், புதுக் கோட்டை, கரூர் எஸ்.பிக்கள் மற்றும் திருச்சி மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களை சேர்ந்த 2000த்துக் கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மேலும் முத்துப்பேட்டை நகரை போலீசார் தீவிர கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதே போன்று முத்துப்பேட்டை சுற்றுபுறப்பகுதியில் சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போன்று கடல் வழியாக தீவீ ரவாதிகள் யாரும் ஊடுருவாமல் இருக்க கடற்கரை பகுதிகள் மற்றும் அலையாத்திக்காடுகள், லகூன் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கடற்படை போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.










No comments:
Post a Comment