செப்டம்பர் 21: இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வளம்.
"பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா" சார்பாக முத்துப்பேட்டையில் நடக்கவிருக்கும் விநாயகர் சதுர்த்தி ஊர்வளத்தின் பாதையை மாற்றக்கோரிய வழக்கு தொடப்பட்டது. இதன் விசாரணை 18.09.2015 சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்ததன் அடிப்படையில் இந்த வழக்கு வரும் திங்கள் கிழமை ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மீண்டும் இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இந்த விசாரனையில் நீதிபதிகள் முத்துப்பேட்டையில் 22-09-2015யில் நடைபெறவிருக்கும் விநாயகர் சிலை ஊர்வலம் கண்டிப்பாக பகல் 2 மணிக்கு துவங்கி மாலை 6 மணிக்குள் முடிக்க வேண்டும் என்றும் இந்த வருடமும் பழையபடியே முத்துப்பேட்டை தர்கா, ஆசாத் நகர் பாலம், பழைய பேருந்து நிலையம், பட்டுக்கோட்டை சாலை, கொய்யா வலைவு, AM.பங்களா வாசல், ஓடக்கரை, ரஹ்மத் பள்ளி, செம்படவன்காடு, ECR ரோடு வழியில் சென்று பாமணியாற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட வேண்டும்.
ஏதேனும் ஒரே அசம்பாவிதம் நடந்தாலும், ஊர்வலம் அனுமதி ரத்து செய்யப்படும். என்று நீதிபதி உத்தரவிட்டார்.
தகவல் KSH. சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)

No comments:
Post a Comment