முத்துப்பேட்டை அஸோசியேசன் சிங்கப்பூர் சார்பாக நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சி. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Monday, July 6

முத்துப்பேட்டை அஸோசியேசன் சிங்கப்பூர் சார்பாக நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சி.













ஜுலை 06: சிங்கப்பூரில் 05/07/2015 அன்று நமது முத்துப்பேட்டை அஸோசியேசன் சிங்கப்பூர் சார்பாக இப்தார் நிகழ்ச்சி பென்கூலின் பள்ளி மூன்றாம் தளத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.

முதலில் சங்கத் தலைவர். MAY ஜாகிர் உசேன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். பின்பு சங்க செயற்குழு உறுப்பினர். ஜனாப் ரசீத் அலி அவர்கள் நமது சங்கம் கடந்து வந்த பாதையை பற்றி எடுத்து கூறினார்கள். பின்பு நாம் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்த FIM (Federal indian muslim association) தலைவர். ஜனாப் பரிதுல்லாஹ் சிறப்புறையாற்றி இந்த நிகழ்ச்சி ஏற்பாடு குழுவை பாராட்டினார். மேலும் இது போன்ற பொது நிகழ்ச்சிகள் வரும் காலங்களில் தொடர வேண்டும் என்று கூறினார்கள்.

அதன் தொடர்ச்சியாக பென்கூலின் பள்ளி இமாம் அவர்களின் பயான் சொற்பொலிவு நடைபெற்றது. இதில் FIM ல் அங்கம் வகிக்கும்   16 சங்கத்தில் இருந்து முக்கிய பொருப்பாளர்கள் கலந்து கொண்டு இந்த இப்தார் நிகழ்ச்சியை மேலும் சிறப்பாக்கினார்கள்.

நமது ஊர் பாரம்பரிய உணவில் ஒன்றான பிரியாணி நமது ஊர் சமையல் காரர்களை கொண்டு தயார் செய்து வழங்கப்பட்டது..
சுமார் 200 மேற்பட்டோர் ஆண்களும் பெண்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்படைய செய்தனர் ...

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here