பொது மக்களை ஏமாற்றும் பட்டுக்கோட்டை செல்போன் நிறுவனம்! கசப்பான அனுபவம்! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Sunday, July 5

பொது மக்களை ஏமாற்றும் பட்டுக்கோட்டை செல்போன் நிறுவனம்! கசப்பான அனுபவம்!


ஜுலை 05: பொது மக்களை ஏமாற்றும் பட்டுக்கோட்டை செல்போன் நிறுவனம்! கசப்பான அனுபவம்!
பட்டுக்கோட்டையில் கடந்த சில ஆண்டுகளாக செல்பேசி விற்பனையில் முன்னனியில் உள்ளதாக கூறப்படும் செல்போன் என்ற நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வருகின்றது. பட்டுக்கோட்டை, அதிரை, முத்துப்பேட்டை, மதுக்கூர், மல்லிப்பட்டினம், ஒரத்தநாடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியிலல் உள்ள கிராமங்களில் உள்ளவர்கள் செல்போன் வாங்குவதாக இருந்தாலும் இதர பிற சிம் கார்டு, இண்டெர்நெட் டாங்கில், மற்ற உதிரி பாகங்கள் வாங்குவதற்க்கு இந்த கடைக்கே அதிகம் வருகின்றனர். இங்கு அதிகம் வருவது சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பாமரமக்கள் என்பதால் அவர்களை இந்நிறுவனம் தொடர்ந்து எளிதாக ஏமாற்றி விடுகின்றது. முதலில் ஒரு பொருள் வாங்கச் செல்லும் போது வாடிக்கையாளர்களிடம் நல்ல முறையில் நடந்துக்கொள்ளும் ஊழியர்கள் இரண்டாவதாக புகார் என்று கடையை அனுகும் போது முன்பு அன்புடன் பேசிய ஊழியரின் பேச்சு வேறு விதமாக இருக்கும்.

அதிரையை சேர்ந்த ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் MTS இண்டெர்நெட் மோடம் ஒன்றை இங்கு வாங்கியுள்ளார். அப்போது அங்குள்ள ஊழியர் உங்கள் ஊருக்கு போஸ்பெயிட் பிளான் தான் ஆக்டிவேட் செய்ய முடியும் என்றும் மாதம் ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் கூறியதுடன் மோடத்திற்கு இரண்டாயிரம் ரூபாயும், முதலில் டெபாசிட்டாக 1000 ரூபாயும் சேர்த்து மொத்தம் 3000 ரூபாய் கேட்டுள்ளார். 3000 ரூபாய் செலுத்தி மோடத்தை வாங்கி அதிரைக்கு சென்ற அந்த நபருக்கு 20 நாள் ஆகியும் இண்டெர்னெட் கனெக்சன் எடுக்காததால் கடைக்கு நேரில் சென்று விசாரித்தார். இதற்க்கு கடை ஊழியர் உங்கள் நம்பர் ஆக்டிவேட் ஆகவில்லை என்றும் இன்னும் இரண்டு நாட்களில் ஆக்டிவேட் ஆகிவிடும் என்று கூறியுள்ளார். ஆனால் இரண்டு நால் கழித்து இவருக்கு அதிரையில் இண்டெர்னெட் எடுக்காததால் மீண்டும் கடைக்கு சென்று கேட்டுள்ளார். அதற்க்கு அந்த கடை ஊழியர் இது உங்கள் ஊருக்கு எடுக்காது, பட்டுக்கோட்டைகயில் தான் சிக்னல் கிடைக்கும் என்று கூறியுள்ளார். அதற்க்கு அவர் இதை முன்பே தாங்கள் கூறவேண்டியது தானே என்று முறையிட்டதற்க்கு அவர்கள் எங்களால் ஒன்றும் செய்யமுடியாது என்று கூறியுள்ளனர்.
இதனை அடுத்து அந்த நபர் சரி டெபாசிட் பணம் ஆயிரம் ரூபாயை திரும்ப தாருங்கள் என்று கேட்டுள்ளார். அதற்க்கு அது MTS நிறுவனத்திடம் செலுத்தப்பட்டது அவர்களை அனுகி பெற்றுக்கொள்ளவும் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து திருச்சியில் உள்ள MTS நிறுவனத்தை அனுகி அங்கு தனது கணக்கை பார்த்ததில் அங்கு அந்த MTS ஊழியர் தங்கள் கணக்கில் எந்த பணமும் டெபாசிட் செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார். இதனை அடுத்து பட்டுக்கோட்டை செல் நிறுவனத்திற்க்கு சென்று கேட்டதில் அந்த ஊழியர் நீங்கள் பொருள் வாங்கி மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. இதனை ஒன்றும் செய்யமுடியாது என்று கூறி கராராக பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சியும் கோபமும் அடைந்த நபர் நமது செய்தியாளரை தொடர்புகொண்டு என்னை போல் யாரும் இந்த கடைக்கு சென்று ஏமாறக்கூடாது. இதனை பதிந்து அனைவருக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

தகவல்: அதிரை பிறை

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here