ஜுலை 06: இந்தியன் கல்சுரல் சொசைட்டியின் இப்தார் நிகழ்ச்சியில் அமீரக தொழில் அதிபர்கள் பங்கேற்பு.
இந்தியன் கல்சுரல் சொசைட்டி சார்பாக இப்தார் நிகழ்ச்சி துபாய் அப்ஜார் க்ரேன்ட் ஹோட்டலில் 03-07-2015 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமீரக தலைவர் திருச்சி சகோ.முபாரக் தலைமை வகித்தார், செயளாலர் சகோ.நிலாம் வரவேற்புறையாற்றினார், பொது செயளாலர் வலசை சகோ. பைசல் அறிமுக உரை ஆற்றினார். இதில் சமுதாய இயக்க தலைவர்கள் பத்திரிகையாளர்கள், தொழில்அதிபர்கள், ஜமாத் தலைவர்கள் கலந்து கொண்டு கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார்கள் இறுதியாக துபாய் மண்டல தலைவர் சகோ. யூசுப் நன்றியுறையாற்றினார்.








No comments:
Post a Comment