ஜுலை 05: துபாயில் முத்துப்பேட்டை மூன் லைட் கிரிக்கெட் அணியினர் நடத்திய 6ஆம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி!
அன்புடையிர் அஸ்ஸலமு அழைக்கும்(வரஹ்...)
துபாயில் வெள்ளிக்கிழமை 03-07-2015 அன்று முத்துப்பேட்டை மூன் லைட் கிரிக்கெட் அணி சார்பாக 6 ஆம் ஆண்டு இப்தார் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் நமதூரை சார்ந்த திரலான சகோதரர்களும் மற்றும் வெளியூர் சகோதரர்களும் வருகை தந்து இருந்தனர். அனைவருக்கும் இப்தார் விருந்தில் நோன்புக் கஞ்சி, சமோசா, பழ வகைகள் மற்றும் ஜுஸ் பரிமாரப்பட்டது, மற்றும் மக்ரிப் தொழுகையும், அதனை தொடர்ந்து இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு சாப்பாடும் பரிமாரப்பட்டது. கடந்த வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்த வருடம் அதிமான சகோதரர்கள் கலந்துக்கொண்டனர். இந்த இப்தார் நிகழ்ச்சியில் முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர் மற்றும் இதர சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
வட இந்தியாவில் வாழும் முஸ்லிம் சமுதாய சகோதரர்களுக்கு அடிப்படை வசதி மற்றும் குடிநீர் பெற வெகு தொலைவிற்கு சென்று அதனை பெற வேண்டி உள்ளது. இதனால் அவர்களுக்கு நமது இஸ்லாமிய சகோதரர்கள் நமது முஸ்லிம் சமுதாயம் இருக்கின்ற பல இடத்திற்கு கிணறு தோன்றி அவர்களுக்கான அடிப்படை வசதி செய்து கொடுக்கப்படுகிறது. இதற்கு நமது கிரிக்கெட் அணியினரிடம் உதவி கோரப்பட்டது. அனைவரும் தாராளாமக தங்களின் உதவிகளை அளித்தனர்.
முத்துப்பேட்டை மூன் லைட் கிரிக்கெட் அணியின் 6 ஆம் ஆண்டு இப்தார் விருந்துதில் வருகை தந்து சிறப்பித்த அனைத்து சகோதரர்களுக்கும் முத்துப்பேட்டை மூன் லைட் கிரிக்கெட் அணியின் சார்பாகவும் மற்றும் முத்துப்பேட்டை.org, முத்துப்பேட்டை பிபிசி, முத்துப்பேட்டை நியூஸ், ஆகிய இணையதளங்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த புனிதமிக்க ரமலானில் உலக முஸ்லிம்களுக்காகவும் மற்றும் இந்நிகழ்ச்சி வரும் வருடங்களிளும் மென்மேலும் தொடர பிராத்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இங்கணம்.
முத்துப்பேட்டை மூன் லைட் கிரிக்கெட் அணி. - துபாய்
புகைப்படங்கள் 2 தொகுப்பு விரைவில்.....




















No comments:
Post a Comment