துபாய் மற்றும் அமீரக்த்தில் இருந்து ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் பயணிகளின் கவனத்திற்கு. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Tuesday, June 30

துபாய் மற்றும் அமீரக்த்தில் இருந்து ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் பயணிகளின் கவனத்திற்கு.



ஜுன் 30: துபாய் மற்றும் அமீரக்த்தில் இருந்து ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் பயணிகளின் கவனத்திற்கு. 
துபாய் மற்றும் அமீரக்த்தில் இருந்து ‘ஏர் இந்தியா’ விமானங்களில் தாயகம் வரும் பயணிகளின் எட்டு கிலோவுக்கு மேற்பட்ட ஹேன்ட் லக்கேஜுக்கு வரும் முதல் தேதியில்  இருந்து  கூடுதல்  கட்டணம் அதாவது 8கிலோவுக்கு மேல் உள்ள ஒவ்வொரு கிலோவுக்கும் 60 திர்ஹம்  வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் தாயகம் வரும் பயணிகளின் ஏழு கிலோவுக்கு மேற்பட்ட ஹேன்ட் லக்கேஜுக்கு வரும் ஜுலை முதல் தேதியில்  இருந்து  கூடுதல்  கட்டணம் அதாவது  7 கிலோவுக்கு மேல் உள்ள ஒவ்வொரு கிலோவுக்கும் 60 திர்ஹம்  வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்  இந்தியா விமானங்களில் தற்போது பயணிகள் தங்களுடன் கைச்சுமையாக (ஹேன்ட் லக்கேஜ்) சுமார் 8 கிலோ பொருட்களை கொண்டுவர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  ஆனால், இந்த அதிகபட்ச அளவையும் தாண்டி சிலர் 10-15 கிலோ கூடுதல்  சுமையை  கொண்டு  வருவதுண்டு.

இதைப்போன்ற உபரி சுமை கொண்டு வருபவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால்,  அதற்கு மறுநாளே, இந்த திட்டத்தை உடனடியாக கொண்டுவரும் உத்தேசம் ஏதுமில்லை என விமானத்துறை இணை மந்திரி கூறியிருந்தார்.

இந்நிலையில்,  ஐக்கிய  அரபு நாடுகளில் இருந்து ‘ஏர் இந்தியா’ விமானங்களில் தாயகம் வரும் பயணிகளின் ஹேன்ட் லக்கேஜுக்கு வரும் ஜூலை மாதம் முதல் தேதியில் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணமில்லா கைச்சுமையாக அனுமதிக்கப்பட்டுள்ள 8 கிலோவுக்கு மேல் கூடுதலாக கொண்டுவரும் ஒவ்வொரு கிலோவுக்கும் 60 திர்ஹம் (சுமார் ஆயிரம் ரூபாய்) வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஷார்ஜா மற்றும் துபாய் விமான நிலையங்களின் நுழைவுப் பகுதியில் புதிய எடை போடும் இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here