ஜுன் 30: கடந்த வெள்ளிக்கிழமை அன்று (26-06-2015) இந்த ஆண்டின் மிக அதிக பயணிகளை துபாய் விமான நிலையம் கையாண்டுள்ளது. ஒருநாளில் மட்டும் சுமார் 70,000 பேர் துபாய் விமான நிலையம் வழியாக பயணித்து உள்ளனர்.
பள்ளிகளுக்கான இரண்டுமாத விடுமுறை காலம் ஆரம்பித்துவிட்டதால் பலரும் தாய்நாடு நோக்கியும் சுற்றுலாவிற்கும் கிளம்பிவிட்டனர்.
பயணிகளில் 55% மேற்பட்டவர்கள் கிளம்பியது இந்திய நகரங்களை நோக்கித்தான். வழக்கமாக 3 மணி நேரத்திற்கு முன்பாக விமான நிலையம் செல்ல வேண்டியவர்களை கடந்த வாரம் முழுவதும் 5 மணி நேரத்திற்கு முன்பாக வர சொல்லி பத்து நாட்களுக்கு முன்பே அறிவித்துவிட்டனர்.
கடந்த ஆண்டு அதிக பயணிகளை கையாளும் லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தை முந்தி அதிக பயணிகளை கையாண்டு உலகின் மிகப்பெரிய விமான நிலையம் என்ற அந்தஸ்த்தை பெற்ற துபாய் விமான நிலையம் தற்போதும் வளர்ச்சி நிலையிலேயே சென்று கொண்டிருக்கிறது.
ஒட்டுமொத்த நாட்டின் வருவாயில் சுமார் 24% வருவாய் இந்த விமான நிலையம் மூலமே கிடைக்கிறது.
வேறு எந்தவொரு நாடும் விமான நிலையம் மூலம் இத்தகைய வருவாயை சம்பாதித்ததில்லை.




No comments:
Post a Comment