விநாயகர் ஊர்வலம் : முத்துப்பேட்டையின் தற்போதைய நிலவரம் ! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Wednesday, September 3

விநாயகர் ஊர்வலம் : முத்துப்பேட்டையின் தற்போதைய நிலவரம் !



செப்டம்பர் 03: முத்துப்பேட்டையில் இன்று மாலை விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீசார்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஊர்வலம் ஜாம்பவான் ஓடை பகுதியிலிருந்து புறப்பட்டு முத்துப்பேட்டை தர்கா, ஆசாத்நகர், பழைய பஸ் நிலையம், பெரியகடைவீதி வழியாக செல்கிறது. பின்னர் கீழக்காடு அருகே உள்ள பாமணி ஆற்றில் சிலைகள் கரைக்கப்படுகிறது.

விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய மண்டல ஐ.ஜி. ராமசுப்பிரமணி, டி.ஐ.ஜி. சஞ்சீவ்குமார், திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு காளிராஜ், மகேஷ்குமார், தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜ், 4 கூடுதல் போலீஸ் சூப்பிரண் டுகள், 27 டி.எஸ்.பி.கள், 52 இன்ஸ்பெக்டர்கள், 167 சப்–இன்ஸ்பெக்டர்கள், 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

மேலும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை மற்றும் ஆயுதப்படை போலீசார் 1000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். ஊர்வலத்தை கண்காணிக்க 4 இடங்களில் கண்காணிப்பு காமிரா, 4 இடங்களில் சோதனைசாவடி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளுக்கும், வர்த்தக நிறுவனங்களுக்கும், டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here