முத்துப்பேட்டை பேருராட்சியின் நிர்வாக சீர்கெட்டை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Saturday, December 14

முத்துப்பேட்டை பேருராட்சியின் நிர்வாக சீர்கெட்டை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்.





டிசம்பர் 14: முத்துப்பேட்டை சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சி சார்பில் பேட்டை சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியும் ஆகிவிட்டது. இதை சரி செய்யாத பேருராட்சியை சரிசெய்ய வலியுறுத்தியும், தெருக்களில் தினம் குப்பைகள் அகற்றுவது கிடையாது. 
இதனால் சுகாதார கேடாகி கொசுக்கள் அதிகம் உற்பத்தி ஆகின்றன. இதனால் டெங்கு,மலேரியா,போன்ற வைரஸ் நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் தினம் சுத்தம் செய்து குப்பைகளை அப்புறப்படுத்தாத பேருராட்சியின் நிர்வாக சீர்கெட்டை கண்டித்தும், மின்சார வாரியம் ஆசாத் நகர் மீன் மார்க்கெட் அருகில் உள்ள ட்ரான்ஸ்பார்மர் தொடும் தூரத்தில் உள்ளதால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் அதை இடமாற்றம் செய்ய வலியுறுத்தியும், முத்துப்பேட்டையில் இருக்கும் டாக்டர்கள் இரவு நேரங்களில் அவசரத்திற்கு மருத்துவம் பார்ப்பது கிடையாது. 
நோயாளிகள் அபாய கட்டத்திற்கு போகும் நிலை ஏற்படுகிறது அதனால் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் டாக்டர்கள் நியமிக்க வலியுறுத்தியும் மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை பேருராட்சி அலுவலகம் முன்பு நடைப்பெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் நெய்னா முகம்மது தலைமை வகித்தார். பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் அபுபக்கர் சித்திக் கண்டன உரையாற்றினார். 
இதில் பலரும் பேசினார்கள். நகர துணைத் தலைவர் அசரப் அலி, துணைச் செயலாளர் ஜெகபர் அலி, நிர்வாகிகள் எர்சாத், மண்சூர்அலி, சதாம், மைதீன் உட்பட சுமார் 200ம் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். நகர செயலாளர் தீன் முகம்மது நன்றி கூறினார்.

படம் செய்தி:
முத்துப்பேட்டையில் நேற்று மாலை பேருராட்சியின் நிர்வாக சீர்கெட்டை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தகவல் : நிருபர் மு.முகைதீன் பிச்சை
முத்துப்பேட்டை

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here