ஆகஸ்ட் 31: கைது செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள், குறிப்பாக பெண் வாடிக்கையாளர்களின் பழுது பார்க்க மற்றும் சர்விஸ் செய்ய கொடுக்கப்படும் மொபைல்களில், லெப்டப்களில் இருந்து அவர்களின் தனிப்பட்ட வீடியோ மற்றும் போட்டோக்களை திருடி பின்னர் அதனை வைத்து ப்லேக்மெயில் செய்து சிலரிடம் பணம் கரந்தும் வந்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஆசிய நாட்டவர்களும் கத்தார் நாட்டவர்களும் அடங்குவதாக கத்தார் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.
எலக்ட்ரானிக் உபகர்கணங்களை பழுது பார்க்க மற்றும் சர்விஸ் செய்யக் கொடுப்பவர்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்களை அழித்துவிட்டு கொடுக்கும் படி இவ்விடயம் தொடர்பாக கத்தார் உள்துறை அமைச்சகம் கத்தாரில் வசிப்பவர்களிடம் விஷேட வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனது.
மேலும் புதிதாக சர்விஸ் சென்டர்களுக்கு சென்று சொப்ட்வேர்களை பதிவேற்றம் செய்பவர்கள் மிகவும் கவனமாக விழிபுணர்வுடனும் செய்ற்படுமாறும், சில விசமிகள் ஹேக்கின் சொப்ட்வேர்களை பதிவேற்றிவிடுவதாகவும் கத்தார் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதே வேலை இதுமாதிரியான தில்லுமுல்லுகளில் ஈடுபடும் ஆசாமிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது கத்தார் உள்துறை அமைச்சகம்.


No comments:
Post a Comment