அதிரையில் நாளை விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் ! முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் !! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Saturday, August 30

அதிரையில் நாளை விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் ! முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் !!








ஆகஸ்ட் 30: அதிரையில் நாளை நடைபெற உள்ள விநாயக சதூர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

நாளை 31-08-2014 மாலை விநாயக சதூர்த்தி ஊர்வலம் அதிரையின் முக்கிய பகுதிகளின் வழியாக கடந்து செல்ல இருப்பதால், இப்பகுதிகளில் எவ்வித அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக முக்கிய பகுதிகளின் இணைப்பு சாலைகளில் வாகன தடுப்பு தட்டிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிரை வண்டிப்பேட்டை, பேருந்து நிலையம் போன்ற இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் அதிரை காவல் துறையின் சார்பில் இருதரப்பினரை தனித்தனியாக அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் விநாயக சதூர்த்தி ஊர்வலத்தை ஏற்று நடத்தும் அமைப்பினர், அதிரையில் செயல்படும் அனைத்து சமூக அமைப்புகள், அதிரை வர்த்தக சங்க நிர்வாகிகள், அனைத்து மஹல்லா ஜமாத் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டரிடம் ஆலோசனைகள் பெறப்பட்டது. ஊர்வலத்தில் எவ்வித அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் ஒத்துழைப்பு வழங்கிடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும் எவ்வித அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊர்வலம் செல்லும் பகுதிகளில் உள்ள வியாபார கடைகளை அடைக்கும்படியும் வர்த்தகர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆங்காங்கே கூட்டம் கூடி நிற்பதை தவிர்த்துக்கொள்ளும்படி காவல்துறையின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தகவல்: அதிரை நியூஸ்

முத்துப்பேட்டையில் செப்டம்பர் 03 தேதி மாலை 3 மணியளவில் விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் நடைபெறுகிறது. அதிராம்பட்டினத்தை போலவே முத்துப்பேட்டையில் அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here