கோவையில் நடைபெற்ற மாற்று மத சகோதரர்களுக்காக சிறப்பு நோன்பு திறப்பு நிகழ்ச்சி. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Wednesday, July 16

கோவையில் நடைபெற்ற மாற்று மத சகோதரர்களுக்காக சிறப்பு நோன்பு திறப்பு நிகழ்ச்சி.











ஜுலை 16: கோவையில் நடைபெற்ற மாற்று மத சகோதரர்களுக்காக சிறப்பு நோன்பு திறப்பு நிகழ்ச்சி.

கோவை மாநகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக மாற்று சமய சகோதரர்களுக்காக சிறப்பு நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஜூலை 13, 2014, ஞாயிறு மாலை 6:45 மணியளவில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த விருந்தினர் அனைவரும் முதலில் கரும்புக்கடை, சலாமத் நகரில் அமைந்துள்ள இஹ்ஸான் பள்ளிவாசலில் வந்தடைந்தனர். பின்னர் வந்திருந்த சகோதர சகோதரிகள் அனைவரும் அங்கு கூடியிருந்த இஸ்லாமிய சகோதரர்களுடன் ஒன்றாக அமர்ந்து நோன்பு திறந்தனர். அதன் பின் பள்ளிவாசலில் இஸ்லாமியர்களின் வலிபட்டுமுரயினையும் பார்வையிட்டனர்.

தொழுகை முடிந்தபின், அருகிலுள்ள இஸ்லாமியா மெட்ரிக்குலேஷன் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்திருந்த பந்தலில் வந்து அமர்தனர்.

நிகழ்விற்கு வந்திருந்த சகோதர சமயத்தவர் அனைவரையும் கோவை மாநகர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர், ஜனாப். K.A. சையது இப்ராஹிம் அவர்கள் வரவேற்றும் இயக்கத்தின் கொள்கையினையும் அதன் செயல்பாட்டினையும் அனைவருக்கும் விளக்கும் விதத்திலும் வரவேற்ப்புரை நிகழ்த்தினார்.

அடுத்து, “உலகில் மனிதனின் துயரத்திற்கான மூல காரணம்” என்ற தலைப்பில் இஸ்லாமியப் பார்வையில் இன்றைய மனிதன் சந்திக்கும் துயரங்களையும் அதன் மூலகாரணமாக விளங்குவது செல்வமே என்றும். இஸ்லாமிய அடிப்படையில் செல்வமுடையவர் ஏழைகளுக்கு உதவுவது கடமை என்றும் அனைவருக்கும் தெளிவுபடுத்தினார். உரையினை மிகவும் உன்னிப்பாக கேட்ட சகோதரர்கள், உரையின் முடிவில் தங்கள் கரகோஷங்களை எழுப்பி உரையின் தாக்கத்தை வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்வில், சிறுதுளி அமைப்பின் தலைவர், திருமதி. வனிதா மோகன் அவர்கள், RAAC அமைப்பின் தலைவர், திரு. ரவீந்திரன் அவர்கள், லீட் இந்திய அமைப்பின் செயலாளர், திரு மணியன் அவர்கள், Universal Brotherhood Association தலைவர், வழக்கறிஞர் நந்தகுமார் அவர்கள், TASK அமைப்பின் தலைவர், திரு. குர்தீப் சிங் அவர்கள், சாந்தி ஆஷ்ரம் தலைவர், டாக்டர் வினு அறம் அவர்கள், RHYTHEMS அமைப்பின் தலைவர், சகோதரி அற்புத பால்ராணி அவர்கள், விடுதலை சிறுத்தைகள் சார்பாக திரு. சுசி கலையரசன் அவர்கள், கோவை மாவட்ட ஐக்கிய ஜமாஅத் செயலாளர், ஜனாப். CTC ஜப்பார் அவர்கள், மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆன்றோர்களும், பத்திரிக்கை செய்தியாளர்களும், மற்றும் அன்புள்ளம் கொண்ட சகோதர சகோதரிகள் திரளாக கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் ஒருங்கிணப்பாளர் ஜனாப். அப்துல் ஜலீல் அவர்கள் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சியை சிறந்த முறையில் வழிநடத்தி வந்திருந்த அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் கோவை மாநகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் இணைச்செயலாளர், ஜனாப். M. சலீம் அவர்கள்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த விருந்தினர் அனைவருக்கும் இரவு விருந்து பரிமாறப்பட்டது. இறுதியில் நிகழ்வை சிறப்பித்த அனைவருக்கும் திருக்குர்ஆன் தமிழாக்கமும் இஸ்லாமிய புத்தகங்களும் வழங்கப்பட்டது.

உண்மையில் பல்வேறு சமயங்கள் கொள்கையினரும் ஒன்றுகலந்து கருத்தொருமித்த இந்நிகழ்வு ஓர் கதம்பமாகவே மனம்வீசியது...

எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே...!!!

புகைப்படம்: அப்துல்ஹக்கீம்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here