கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக தொழுகைக்கு நேரம் ஒதுக்கப்பட்ட அதிசயம்....!! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Sunday, March 2

கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக தொழுகைக்கு நேரம் ஒதுக்கப்பட்ட அதிசயம்....!!


மார்ச் 02: கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக தொழுகைக்கு நேரம் ஒதுக்கப்பட்ட அதிசயம்....!!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. மார்ச் 1 சனிக்கிழமை வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

இந்த போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த வேலையில் அனைவரையும் ஆச்சர்யப்படத்தக்க வகையில் ஓர் நிகழ்வு நடைபெற்றது.

போட்டி நடந்துகொண்டிருக்கும் வேளையில் மஃரிப் தொழுகைக்கான நேரம் வந்தது. இதனால் ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் போட்டிக்கு இடையில் நடுவரிடம் மஃரிப் தொழுவதற்கு தங்களுக்கு நேரம் ஒதுக்கு தருமாறு அனுமதி கேட்டனர்.

நடுவர்கள் அனுமதி வழங்கியதன் அடிப்படையில் ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மைதானத்திலேயே தொழுகையில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வு அனைத்து ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

கிரிக்கெட் வரலாற்றில் போட்டிக்கும் இடையில் தொழுகைக்கு நேரம் ஒதுக்கப்பட்டது இதுவே முதன் முறையாகும்.

இந்த உயரிய முறையை முதன் முதலாக துவக்கி வைத்த ஆப்கானிஸ்தான் அணி உலகம் போற்றும் வகையில் பல்வேறு சாதனைகளை புரிய வேண்டும் என்று இறைஞ்சுகிறோம்.

இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

தகவல்: அதிரை பிறை

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here