மார்ச் 02: முத்துப்பேட்டையில் ரூ.90 லட்சத்தில் அமைக்கப்பட உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு அமைச்சர் காமராஜ் அடிக்கல் நாட்டினார்.
அரசு விருந்தினர் மாளிகை
முத்துப்பேட்டையில் சுற்றுலா மேம்பாட்டிற்காக அரசு விருந்தினர் மாளிகையை ரூ.90 லட்சத்து 20 ஆயிரம் செலவில் கட்ட அரசு உத்தரவிட்டது. அதன்படி அரசு விருந்தினர் மாளிகை முத்துப்பேட்டை கோவிலூர் பைபாஸ் சாலை அருகே அமைக்கப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட கலெக்டர் நடராசன் தலைமை தாங்கினார். மன்னார்குடி உதவி கலெக்டர் சுப்பு, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அசோகன், மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி அம்பிகாபதி, ஒன்றியக்குழு தலைவர்கள் நடராஜன், ஜீவானந்தம், மங்கள் கூட்டுறவு வங்கி தலைவர் மங்கள் அன்பழகன், தாசில்தார் ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
விழாவில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அரசு விருந்தினர் மாளிகைக்கான அடிக்கல்லை நாட்டினார். அதைதொடர்ந்து மாளிகைக்கான வரைபடத்தை பார்வையிட்ட அவர், அதிகாரிகளிடம் வரைபடம் குறித்த விளக்கங்களை கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஜெகன், ஜெயக்குமார், வருவாய் அலுவலர் ராமசந்திரன், மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் இஸ்மாயில், கல்விக்குழு உறுப்பினர்கள் மருதுராஜேந்திரன், பாலசுப்பிரமணியன், குண சேகரன், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment