கோவில் மணியே அடித்த வெளிநாட்டு சுற்றுலா பயணியே கொடூரமாக தாக்கிய மிருகங்கள் !! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Saturday, March 1

கோவில் மணியே அடித்த வெளிநாட்டு சுற்றுலா பயணியே கொடூரமாக தாக்கிய மிருகங்கள் !!




மார்ச் 01: இந்தியாவில் கோவில் மணி அடித்த காரணத்தால் சுற்றுலா பயணி ஒருவரின் முகத்தை கும்பலொன்று சிதைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவை சேர்ந்த சுற்றுலா பயணி செர்ஜி போக்டொனொவ் (வயது28), இந்தியாவுக்கு வந்திருந்தார்.

இங்கு வந்தவர் கோவாவில் உள்ள மந்திரம் கிராமத்திற்கு சென்றிருந்தார், அங்குள்ள கோவிலை புகைப்படம் எடுத்தார்.

பின்னர் அங்கு உள்ள சமய மணியை அடித்துள்ளார், இதனைதொடர்ந்து அங்கு உள்ள சாமியார்களால் அவர் தாக்கப்பட்டுள்ளார்.

இதில் அவரது முகத்தின் ஒருபாகம் முற்றிலும் சிதைந்து போய் விட்டது.

தனது காயம் குறித்த வீடியோ ஒன்றை ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு அனுப்பி வைத்து தான் நாடு திரும்ப உதவி கோரி உள்ளார்.

இதுகுறித்து டெலிபோன் மூலம் ரஷ்ய மீடியாக்களுக்கு செர்ஜி கூறுகையில், நான் பார்க்கும் போது அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் மிக அமைதியாகவும், நட்புறவுடனும் நடந்து கொண்டனர்.

நான் லோக்கலில் உள்ள கோவிலுக்கு சென்று சில புகைப்படங்கள் எடுத்தேன் பின்னர் அங்குள்ள மணியை அடித்தேன் பிறகு அனைத்தும் மாறி விட்டது.

அந்த மணி இறந்து போனாலோ அல்லது புனித நாட்களிலோ தான் அடிக்கப்படும்.

மணி அடித்ததும் ஒரு கும்பல் வந்து என்னை அடித்து உதைத்தனர், என்னை தெருவில் இழுத்து உதைத்து கம்பால் சரமாறியாக தாக்கினார்கள்.

பின்னர் எனக்கு யாரும் உதவவில்லை, எனது பொருட்கள் மற்றும் பணப்பை பறிபோய்விட்டது.

எனக்கு மாற்று வழி எதுவும் தெரியவில்லை. நான் வேதனையுடன் எனது இருப்பிடம் திரும்பினேன், நான் எனது தாயாருக்கு போன் செய்து உடனடியாக பணம் அனுப்புமாறு கேட்டு கொண்டேன்.

எனது முகதோற்றத்தை எனது தாயார் பார்த்தால் அவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்து விடும்.

அவர் எனது நல்ல தோற்றத்தையே பார்த்து உள்ளார், நான் தேவையான மருத்துவ உதவியை ரஷ்யாவில் தான் பெற முடியும் என்று தெரிவித்துள்ளார்.

மும்பையில் உள்ள ரஷ்ய தூதரகம் மூலம், தனக்கு உதவுமாறு செர்ஜி கோரிக்கை வைத்து உள்ளார்.

இது போன்ற அயல் நாட்டு சுற்றுலா பயணிகளிடம் நடந்து கொள்ளுவது காட்டுமிராண்டி தனமானது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள் இது போன்ற செயல்கள் உலக அளவில் இந்தியாவிற்கு நல்ல பெயரை பெற்று தராது.


தகவல்: இன்று ஒரு தகவல்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here