பிப்ரவரி 27: போராட்டத்தை கைவிடும் பேச்சிற்கே இடமில்லை - தடா.அப்துல் ரஹீம்..!!
15 ஆண்டுகளுக்கும் மேல் விசாரணை கைதிகளாக சிறையில் வாடும் , நமது சொந்தங்களான, கோவை சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி, இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா.அப்துல் ரஹீம் அவர்களின் தலைமையில் , அக்கட்சியினர் சென்னையில் சாகும் வரை பட்டினி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த மூன்று நாட்களாக நடந்து வந்த இப்போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
போராட்டத்தை கைவிட சொல்லி அரசு தரப்பில் இருந்து வந்த பல்வேறு கோரிக்கைகளையும் சகோதரர் தடா.ரஹீம் அவர்கள் நிராகரித்து விட்டார்கள்.
மேலும் அவர் கூறியதாவது :
"கோவை சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும் என்ற இந்த கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளும் வரையிலும் இப்போராடத்தை கைவிடும் பேச்சிற்கே இடமில்லை " என தெரிவித்துள்ளார்.
இதனிடையே பல்வேறு கட்சி மற்றும் சமுதாய அமைப்புகளின் தலைவர்களும் நேரில் வந்து சந்தித்து தங்களது ஆதரவினை தெரிவித்து, போராட்டத்திற்கு வலு சேர்த்துக் கொண்டிருப்பதால், போராட்டம் இன்னும் வீரியமடையும் என எதிர்பார்க்கப் படுகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சகோதர்களின் உடல்நிலையும் மோசமடைந்து வருவதால், இனியும் காலம் தாமதித்தால் ஒட்டுமொத்த தமிழக மக்களும் போராட்டத்தில் இறங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்பதை கருத்தில் கொண்டு, தமிழக அரசு உடணடியாக தன் மவுனத்தை கலைத்து, கோரிக்கையை நிறைவேற்றி போராளிகளின் உயிர்களை காக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.


No comments:
Post a Comment