வாட்ஸ்ஆப்பில் (Whatsapp Messenger) பேசும் வசதி அறிமுகம்...! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Thursday, February 27

வாட்ஸ்ஆப்பில் (Whatsapp Messenger) பேசும் வசதி அறிமுகம்...!


பிப்ரவரி 27: வாட்ஸ்ஆப்பில் புதிதாக பேசும் வசதி அடுத்த ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

பிரபல மொபைல் தொழில்நுட்ப சேவையான வாட்ஸ்ஆப்பிற்கு 450 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். கடந்த வாரம் இந்தச் சேவையை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து ஏராளமான புதிய வசதிகளை வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தி வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக வரும் ஜூன் மாதம் முதல் வாட்ஸ்ஆப் மூலம் பேசும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. முதல் கட்டமாக ஆண்ட்ராய்ட், ஆப்பிள் ஐஓஎஸ் போன்களில் அறிமுகம் செய்யப்பட்டு, படிப்படியாக பிளாக்பெர்ரி, நோக்கியா, மைக்ரோசாப்ட் போன்களில் அறிமுகம் செய்யப்படும். தற்போது வாட்ஸ்ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் வசதி உள்ளது. ஆனால், அந்த வசதி மூலம் ஒருவரின் தகவலைப் பெற்ற பின்னரே மற்றவர் தகவல் அனுப்ப முடியும். பேசிக்கொள்ள முடியாது.

வைபர் போன்ற தொழில்நுட்ப சேவைகள் மூலமாகவும் பேசவும், தகவல்களை அனுப்பவும் முடியும் என்றாலும் வாட்ஸ்ஆப் சேவையே பெரும்பாலான வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here