ஜனவரி 26: தொடுதிரை வசதி கொண்ட ஆண்ட்ராய்ட் செல்போன்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை சமீப காலங்களில் பெரிதும் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆண்களுக்கு நிகராக பெண்களும் இந்த வகை ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகின்றனர் .மேலும் பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள் இவ்வகை செல்போன்களை பெரிதும் உபயோக படுத்துகின்றனர்.
இதில் உள்ள “வாட்ஸ் ஆப்” (WhatsApp) , “வைபர்” (Viber) போன்ற செயலிகள் (Applications) மூலம் இலவசமாக படம், வீடியோ மற்றும் எஸ்.எம்.எஸ்.களை அனுப்ப முடியும் என்பதால் வெளிநாட்டில் உள்ள நமது சகோதரர்கள் மனைவிக்கு வாங்கி அனுப்புகின்றனர்.இதனை வைத்துகொண்டு அவர்களுக்குள் குரூப் உருவாக்கி தனது தோழியர்கள் மத்தியில் அவர்கள் அவ்வபொழுது எடுக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் கண் இமைக்கும் நேரத்தில் தனது தோழியர்களுக்கு பரிமாரிவருகின்ரனர்.
இதில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த திருமணத்தின் பொழுது மணப்பெண் செய்யும் அலங்காரங்களை அவரது தோழியரே வீடியோ படம் எடுத்து மற்றொரு தனது குரூப்பில் உள்ள தோழியர்களுக்கு அனுப்பி உள்ளனர்.
அப்பொழுது அந்த போனை விடுப்பில் வந்த கணவர் உபயோகித்துள்ளார். அந்த நேரத்தில் வாட்ஸ் ஆப் மூலம் தனது மனைவியின் செல்போனுக்கு வீடியோ காட்சி ஒன்று வந்துள்ளது. அதை பார்த்த கணவர் இது பற்றி மனைவியிடம் விசாரித்துள்ளார். அப்பொழுது அவர்களுக்குள் குழு உருவாக்கி செய்திகளை பரிமாரிவருவதாகவும் அதில் நான் மட்டுமே சுமார் 5 குழுக்களில் உறுப்பினராக உள்ளேன் என கூறியுள்ளார். இதைகேட்ட கணவர் அதிலிருந்த வீடியோக்களையும் புகைப்படங்களையும் அழித்து எச்சரித்து விட்டு மனைவிக்கு வாங்கி கொடுத்திருந்த ஸ்மார்ட் போனை திரும்ப துபாய்க்கே கொண்டு சென்றுவிட்டார்.
நல்ல கணவனின் செயல் அது ! இதே வக்கிர புத்திகாரனாக இருந்திருந்தால் ?
தகவல்: அதிரை எக்ஸ்பிரஸ்


No comments:
Post a Comment