நவம்பர் 30: முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாய கூலித்தொழிலாளி. இவரது மகள் நிவேதிதா (21). அரியலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். இந்நிலையில் நிவேதிதாவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கடும் வயிற்று வலி ஏற்பட்டது. டாக்டர்களி டம் காண்பித்தும் குணமாகவில்லை. உடல் எடையி லும் 50 கிலோவில் இருந்து 25 கிலோவுக்கு குறைவாக மெலிந்து படுத்த படுக்கையானார். மருத்துவ செலவுக்கு வழியின்றி சிரமப்பட்டார்.
இந்த விசித்திர நோயால் பாதிக்கப்பட்ட மாணவி பற்றி கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி தினசரி நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவுப்படி, ஆகஸ்ட் 29ந் தேதி சென்னை மருத்துவமனையில் நிவேதிதா சேர்க்கப்பட்டார். 2 மாத சிகிச்சைக்குப்பின் நேற்று முன் தினம் இரவு வீடு திரும்பினார்.
இதுபற்றி நிவேதிதா நிருபர்களிடம் கூறியதாவது: நான் தற்போது நல்ல நிலைமைக்கு வந்து கொண்டிருக்கிறேன். முக வடிவம் பழைய நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது. எடையும் 10 கிலோ அதிகரித்திருக்கிறது. இவ்வாறு நிவேதிதா கூறினார். விரைவில் குணமடைய அனைவரும் பிராத்தனை செய்வோம்.
முந்தைய பதிவு:


No comments:
Post a Comment