நவம்பர் 30: டெல்லி மெட்ரோவில் 2013-ஆம் ஆண்டில் கைதான பிக்பாக்கெட் திருடர்களில் 92 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். சென்ட்ரல் இண்டஸ்ட்ரியல் செக்யூரிட்டி ஃபோர்ஸ் (CISF) வெளியிட்ட புள்ளிவிபரங்கள் இதனை தெரிவிக்கின்றன.
இவ்வாண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் நவம்பர் 20 வரை 451 பிக்பாக்கெட் திருடர்கள் பிடிபட்டனர். இதில் 415 பேர் பெண்கள் ஆவர். அக்டோபரில் மட்டும் பிக்பாக்கெட் அடித்த 26 பெண்கள் பிடிபட்டுள்ளனர். அம்மாதம் பிக் பாக்கெட் அடித்த ஒரு ஆண் கூட பிடிபடவில்லை. பிடிபட்ட ஆண்களில் பெரும்பாலோர் நல்ல கல்வி கற்றவர்களும், நன்றாக ஆடை அணிந்தவர்களும், லேப்டாப் உள்ளிட்ட உபகரணங்களுடன் நடப்பவர்களுமாவர்.


No comments:
Post a Comment