துபையில் இருந்து மதுரைக்கு ஸ்பைஸ் ஜெட் தனது முதல் பயணத்தை தொடங்கியது. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Saturday, November 23

துபையில் இருந்து மதுரைக்கு ஸ்பைஸ் ஜெட் தனது முதல் பயணத்தை தொடங்கியது.




நவம்பர் 23: துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்துக்கு வாட்டர் சல்யூட் வரவேற்பு பயணிகள் உற்சாகம்.


துபாயில் இருந்து முதல் முறையாக (23-11-2013) இன்று காலை மதுரை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்துக்கு, வாட்டர் சல்யூட் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஸ்பைஸ்ஜெட் சேவையால் தென் மாவட்டங்கள் பொருளாதார வளர்ச்சி பெறும் என தொழிலதிபர்களும், பணமும், நேரமும் மிச்சம் ஆவதாக பயணிகளும் உற்சாகத்துடன் கூறினர்.


மதுரையில் இருந்து துபாய்க்கு விமான சேவையை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நேற்று (22-1-2013) தொடங்கியது. மதுரை விமான நிலையத்தில் நேற்றிரவு 11.35 மணிக்கு குத்து விளக்கேற்றிய பின், முதல் விமானம் துபாய்க்கு புறப்பட்டது. இதில் மதுரை சுங்கத் துறை கமிஷனர் பஹ்கீம் அகமது, இணை கமிஷனர் மீனலோசினி, விமான நிலைய இயக்குனர் சங்கையா பாண்டியன், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலை தலைவர் ரத்தினவேல், தலைவர் ஜெகதீசன், ஸ்பைஸ் ஜெட் விமான நிலைய சேவை பிரிவு முதுநிலை துணை தலைவர் கமல்கிங் கோரானி, விற்பனை பிரிவு முதுநிலை துணை தலைவர் ராஜா, துணை பொது மேலாளர் ரஞ்சீவ், துணை கமாண்டர் குருசரண் சிங், இமிகிரேஷன் இன்ஸ்பெக்டர் விக்டர், மதுரை டிராவல் கிளப் தலைவர் முஸ்தபா, மதுரை விமான நிலைய ஸ்பைஸ் ஜெட் மேலாளர் பாலாஜி உள்பட பலர் பங்கேற்றனர்.


ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தூது குழுவை சேர்ந்த 36 பேர் சென்றனர். ஸ்பைஸ்ஜெட் சேவை குறித்து சுங்கத் துறை கமிஷனர் பஹ்கீம் அகமது கூறுகையில், மதுரையில் இருந்து கொழும்புக்கு 2012 செப்டம்பர் 20ம் தேதி முதல் விமான சேவையை அளித்ததும் ஸ்பைஸ் ஜெட்தான். தற்போது துபாய்க்கு விமான சேவையை தொடங்கி உள்ளது. இதன் மூலம் மதுரை விமான நிலையம் பன்மடங்கு வளர்ச்சி பெறும். வரும் ஜனவரியில் சிங்கப்பூர், பிப்ரவரியில் மலேசியா நாடுகளுக்கு ஸ்பைஸ்ஜெட் விமான போக்குவரத்து தொடங்கும் என நம்புகிறோம். சரக்கு விமான போக்குவரத்தும் விரைவில் தொடங்க உள்ளது என்றனர்.


இதற்கிடையே நேற்று நள்ளிரவு துபாயில் இருந்து புறப்பட்ட முதல் ஸ்பைஸ்ஜெட் விமானம், இன்று காலை 9.35 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்திறங்கியது. இந்த விமானத்துக்கு ‘வாட்டர் சல்யூட் எனப்படும் தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல் விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலைய அதிகாரிகள், ஸ்பைஸ் ஜெட் ஊழியர்கள் வரவேற்றனர். 

விமான நேர விவரம்


தினசரி மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு இரவு 11.35 மணிக்கு புறப்படும் விமானம் (எண்:எஸ்ஜி 023) (SG023) மறுநாள் அதிகாலை 2.20 மணிக்கு துபாய் சென்றடையும். 


அங்கிருந்து தினசரி அதிகாலை 3.50 மணிக்கு புறப்படும் விமானம் (எண்:எஸ்ஜி 024) (SG024) சென்னை வழியாக மதுரைக்கு காலை 9.45 மணிக்கு வந்து சேரும் 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here