நவம்பர் 23: எதியாட் ஏர்வேஸ் விமானம் ‘தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிரக்கப்பட்டது.
அபுதாபியை தலைமையகமாக கொண்ட (ETIHAD AIRWAYS) எதியாட் ஏர்வேஸ் விமானம் ஒன்று, வானில் பறந்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட அவசர நிலை காரணமான, கடந்த (வியாழக்கிழமை) ஆஸ்திரேலியா பிரிஸ்பேன் விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமானி விடுத்த அவசரகால அழைப்பு (mayday distress call) காரணமாக விமானம் தரையிறங்க அனுமதிக்கப்பட்டது என பிரிஸ்பேன் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரிஸ்பேனில் இருந்து சிங்கப்பருக்கு புறப்பட்ட ஏர்பஸ் A330-200 ரக விமானம் இது. 260 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய இந்த விமானத்தில், இன்று 164 பயணிகளே பயணம் செய்தனர். அத்துடன் 11 விமானச் சிப்பந்திகளும் இருந்தனர்.
விமானம் புறப்பட்டு சிறிது நேரத்திலேயே, அதன் இயக்கம் தொடர்பான தொழில்நுட்ப கோளாறு ஏதோ ஏற்பட்டதாக தெரிகிறது. அதையடுத்து விமானி அவசரகால அழைப்பை விடுத்து, விமானம் புறப்பட்ட இடத்துக்கே திரும்ப வந்து தரையிறக்கியுள்ளார். எந்த வகை தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இந்த விமானத்தில் சிங்கப்பூருக்கும், அதைத் தொடர்ந்து அபுதாபிக்கும் பயணம் செய்யவிருந்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக எதியாட் ஏர்வேஸ் பிரிஸ்பேன் அலுவலகம் தெரிவித்துள்ளது.
துபாய் ஏர்-ஷோவில் இரு தினங்களுக்கு முன்னர்தான் 87 ஏர்பஸ் விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்திருந்தது எதியாட் ஏர்வேஸ். அவர்கள் புதிதாக ஆர்டர் கொடுத்துள்ள விமானங்களில் ஏர்பஸ் A330 ரக விமானங்களும் அடக்கம்!


No comments:
Post a Comment