சவுதியில் உணவு, உடையின்றி தவிக்கும் இந்தியர்களுக்கு உதவிடுவீர்! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Saturday, November 23

சவுதியில் உணவு, உடையின்றி தவிக்கும் இந்தியர்களுக்கு உதவிடுவீர்!


நவம்பர் 23: சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் அவர்கள் கடந்த ஏழு மாதங்கள் வழங்கியிருந்த பொதுமன்னிப்பு கடந்த 3 நவம்பர் அன்றுடன் முடிவடைந்த பின்பும் ரியாத் மாநகரில் 150 க்கும் மேற்பட்ட தமிழர்கள் உட்பட சுமார் 500 இந்தியர்கள் பத்தா அருகிலுள்ள சாரா கஜ்ஜான் பூங்காவில் மழையிலும், குளிரிலும், தங்குவதற்கு வழியறியாமல் இப்பூங்காவில் தங்கியிருந்துவருகின்றனர்.

இவர்கள் வசம் நமது இந்தியத்தூதரகம் வழங்கியுள்ள ஈ சி என்றழைக்கப்படும் தற்காலிக பாஸ்போர்ட் உள்ளது மேலும் பலர் பலமுறை தர்ஹீல்(deportation center) சென்று திருப்பி அனுப்பப்பட்டவர்கள் பலருக்கு சமீபகாலத்தில் சவூதி முதலாளியால் ஹுரூப் கொடுக்கப்பட்டுள்ளது, சிலர் சவூதி வந்ததுமுதலே இக்காமா எடுக்கப்படாதவர்கள் இப்படி பலதரப்பட்ட சட்ட சிக்கல் கொண்ட நபர்கள் செல்வதற்கு வழியறியாமல் செய்வதறியாது இப்பூங்காவில் தங்கி நாட்களை கடத்திவருகின்றனர். இதில் பலருக்கு அன்றாட உணவுக்குகூட கையில் பணம் இல்லை என்பதும் மாற்றி உடுத்த உடைகளும் ஏதுமில்லை என்பதும் வேதனைக்குரிய விஷயம்.

நமது இந்தியா பிரடேர்னிட்டி பாரம், ரியாத் உறுப்பினர்கள் கடந்த மூன்று நாட்களாக அங்கு சென்று அங்கு தங்கியிருக்கும் இந்தியர்களின் ஒவ்வொருவரின் நிலைகுறித்த தகவல்களை சேகரித்து வந்துள்ளோம் இவர்களின் நிலைகளை நமது இந்தியதூதரகத்தின் கவணத்திற்கு கொண்டுசென்றுள்ளோம்.

இந்நிலையில் இப்பூங்காவில் தங்கியிருக்கும் நபர்களுக்கு உடுத்துவதற்கு மாற்று உடை இல்லாததாலும் குளிரில் போர்த்திக்கொள்ள கம்பளிகளும் இல்லாத நிலையில் பெரும் அவதிப்பட்டுவருகின்றனர் இதை கண்ட நமது இந்தியா பிரடேர்னிட்டி பாரம் கர்நாடக உறுப்பினர்கள் சில கம்பளிகளும், பழைய பேன்ட் மற்றும் சட்டைகளை நேற்று வழங்கினர் இதை பெற்றுக்கொள்ள பெரும் கூட்டம் அலைமோதியது எனவே நல்லுள்ளம் கொண்ட சகோதரர்கள் தங்களிடம் உள்ள பழைய பேன்ட் சட்டைகள் மற்றும் பழைய கம்பளிகளை வழங்கலாம் நேரடியாக சென்று வழங்கமுடியாதவர்கள் எங்களை தொடர்புகொண்டு பத்தா வில் தந்தால் நாங்கள் வழங்குகிறோம் மேலும் அங்கு தங்கியிருக்கும் இந்தியர்களுக்கு மதிய உணவு வழங்கவும் எண்ணியுள்ளோம் பொருளாதார உதவிகள் செய்ய விருப்பமுள்ளவர்கள் எங்களது கீழ்காணும் கைப்பேசிக்கு தொடர்புகொள்ளவும்.

இந்தியா பிரடேர்நிட்டி பாரம், ரியாத். 0502314754 / 0501871680 / 0563130062 / 0545948951

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here