நவம்பர் 24: மல்லிப்பட்டினம் ஜமாத்தைச் சார்ந்தவர் இலங்கையில் சிறைப்பிடிப்பு!
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுக்கா, சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மல்லிப்பட்டினம், இமாம் ஷாபீ தெரு, புதுவீட்டைச் சேர்ந்த மர்ஹூம்.மா.மு.சே. சுல்தான் மரைக்காயர் அவர்களின் மகனும், ஜனாப். முஹம்மது மைதீன், ஜனாப். அபுல் ஹசன், ஜனாப். ஜாகிர் உசேன் ஆகியோரின் சகோதரரும்,
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாலுக்கா, உடையநாடு அஞ்சல், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மரைக்காவலசை மர்ஹூம். T.K.M. முஹம்மது ராவுத்தர் அவர்களின் மருமகனாரும், ஜனாப். இபுராஹிம்சா, ஜனாப். முஹம்மது அலி, ஜனாப். அப்துல்லா, ஜனாப். கமாலுதீன் இவர்களின் மைத்துனர் ஜனாப். சாதிக் பாட்சா என்பவர் கோட்டைப்பட்டினம் விசைப்படகு கம்பெனியில் சம்பளத்திற்கு மீன்பிடித்தொழில் செய்துக் கொண்டியிருந்தார்.
நேற்றைய தினம் வழக்கம்போல் மீன்பிடிக்க சக ஊழியர்களுடன் கடலுக்கு சென்றியிருந்தார். கடலில் இவரின் விசைப்படகும், மற்ற கோட்டைப்பட்டினம் விசைப்படகும், ஜெகதாப்பட்டினம் விசைப்படகும் மீன் பிடித்துக் கொண்டியிருக்கையில் இலங்கை ராணுவம் அந்த பகுதியில் மீன் பிடித்துக் கொண்டியிருந்த மொத்தம் 21 (இருபத்தியொரு) மீனவர்களையும் கைது செய்து , விசைப்படகையும் இலங்கைக்கு கொண்டு சென்றுவிட்டனர்கள்.
இந்த 21 (இருபத்தியொரு) மீனவர்களையும் இலங்கையில் உள்ள திரிகோணமலை என்கிற ஊரில் இருக்கிற சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்கள். இவர்களுக்கு 28ந்தேதி காவல் நீட்டிப்பு செய்துள்ளார்கள். இதனால் இவர்களின் குடும்பத்தார்கள், உறவினர்கள், கண்ணீரும், கம்பலையுமாக அழுதுக்கொண்டு ஏதுமறியாமல் இருக்கிறார்கள்.
இதன் விபரத்தை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், ஊர்க்காரர்கள் தெரிந்துகொள்ளுமாறு கூறிக்கொள்கிறோம்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தில் மீண்டும் சந்தோசம் நிலவுவதற்கு வல்ல இறைவனிடம் பிரார்த்திப்பீராக..!! ஆமீன்.


No comments:
Post a Comment