அக்டோபர் 14: முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட 6 வது, 7 வது, மற்றும் 16 வது வார்டுகளின் மண் சாலைகள் அனைத்து சீரமைக்கப்பட்டு தார் சாலைகளாக மாற்றும் பணிகள் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகின்றன. இந்த சாலை மேன்பாட்டு திட்டப்பணிகள் அனைத்தும் நாபார்டு திட்டத்தின் கீழ் செயல்பட்டு கொண்டு இருக்கின்றன. இதன் திட்ட மதிப்பீடு 17 இலட்சம்.
சுமார் 1000 மீட்டருக்கு தார் சாலை மேன்பாட்டின் பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. புதுத்தெரு, S.P.K.M தோட்ட வளாகத்தெரு, அகாஸ் தோட்ட வளாக தெரு, மக்கா பள்ளி வாசல் தெரு, போன்ற தெருக்களின் சாலைகள் இந்த திட்டப்பணிகளில் அடங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
NEWS PARTNERS: முத்துப்பேட்டை.ORG

No comments:
Post a Comment