முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் 30 ஆம் ஆண்டின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Saturday, October 13

முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் 30 ஆம் ஆண்டின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு.



அக்டோபர் 13 : அல்லாஹ்வின் மாபெரும் கிருபையைக் கொண்டு வெள்ளி விழாவை கடந்து பொன் விழாவை நோக்கி சிறப்பாக செயலாற்றி வரும் நமது முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் 30 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி துபாய் டெனாட்ட பார்க்கில் சரியாக 8.30 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக M. முஹம்மது அலி கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். இக்கூட்டத்திற்கு மூத்த ஆலோசனைக் குழு உறப்பினர் ஜனாப். M. முஹம்மது ஹிலால் அவர்கள் தலைமை வகித்தார்கள். சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து H.ஷேக் தாவூது அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். 

இதனைத் தொடர்ந்து கடந்த 29 ஆம் ஆண்டின் சங்கத்தின் அனைத்து செயல்பாடுகள் குறித்து தலைவர் S. ஜஹபர் உசேன் அவர்கள் உரைநிகழ்த்தினார்கள். இதனை தொடர்ந்து பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தேர்தல் கண்காணிப்பாளராக M. சாகுல் ஹமீது அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். இதனைத்தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உறுபினர்கள் மற்றும் ஊர்வாசிகள் அனைவருடைய ஒத்த கருத்தோடு ஏக மனதாக புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தார்கள். 

ஆலோசனை குழு உறுப்பினர் P.M. ஜாகிர் உசேன் அவர்கள் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்து வைத்தார்கள். மேலும் இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. 

தேர்வு செய்யப்பட்ட பொறுப்பாளர்களின் விபரம்:

தலைவர்: H. ஷேக் தாவுது

இணை தலைவர்: M.R.S. அஹமது ராவுத்தர் (செல்லாப்பா)

துணை தலைவர்: K.S.N. ஹசன் குத்தூஸ்

பொதுச் செயலாளர்: M.A.K. ஹிதாயத்துல்லாஹ்

இணைச் செயலாளர்: H. தாவூது  கான்

துணைச் செயலாளர்: T.E.S.யூசுப் சுஹைல்

பொருளாளர்: M. சஹாப்தீன், S. ஜஹபர் உசேன்

மக்கள் தொடர்பாளர்கள்: M.A.K. சிராஜுதீன், A.ஆசாத் காமில்

தகவல் தொடர்பாளர்கள்: ASNS. அப்துல் பாரி, A. முஹம்மது இல்யாஸ்

இன்ஷா அல்லாஹ் இதில் தேர்வு செய்யப்பட அனைத்து நிர்வாகிகளும் ஹஜ்ஜுபெருநாள் அன்று தங்களுடைய பொறுப்புகளை ஏற்பார்கள்.

தொகுப்பு:

முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம்.
அமீரகம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here