அக்டோபர் 11: முத்துப்பேட்டையில் 09.10.2012 இரவு 11 மணியளவில் இடியுடன் கூடி மழை பெய்தது. இந்த மழை சுமார் இரவு 1 மணிவரை நீடித்தது. இந்த மழையினால் முத்துப்பேட்டை பகுதியில் மின்சாரம் தடைப்பட்டு இருளில் மூழ்கியது. காலையில் விடிந்தவுடன் மின்சாரம் வரும் என்று அனைத்து பொது மக்களும் எதிர்பார்த்தனர். ஆனால் வரும்.. வராது என்ற நிலை நீடித்தது. குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பவதற்கும், அவர்களுக்கு வேண்டிய உணவுப்பதார்த்தங்களை செய்வதற்கும் பெற்றோர்கள் மிகவும் சிரமப்பட்டார்கள். நீர் மோட்டார் மற்றும் இன்வெட்டர்களும் வேலை செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
முத்துப்பேட்டையில் இரவு 12 மணிக்கு மின்சாரம் தடைப்பட்டு இருந்தது. காலையில் கரண்ட் வரும், மதியம் நேரத்தில் கரண்ட் வரும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு பெருத்த ஏமாற்றம். முத்துப்பேட்டையில் உள்ள துணை மின்சார வாரியத்திற்கு போன் செய்தால் சரியான அளவில் பதில் சொல்ல யாரும் இல்லை. அப்படி, இப்படி என்று சொல்லி 10.9.12 மாலை 5.15 மணியளவில் தான் முத்துப்பேட்டை பகுதிக்கு மின்சாரம் வந்தது.
இந்த மின்வெட்டால் சிறு வணிகர்களும், வியாபாரிகளும், பொது மக்களும் மிகவும் சிரமத்திற்குள்ளாகினார்கள் என்பது மிகையாகாது.
NEWS PARTNER: முத்துப்பேட்டை.org


No comments:
Post a Comment