முத்துப்பேட்டை அருகே ECR சாலையில் மினி வேன் மோதி பைக்கில் சென்ற கணவன் மனைவி பலி! - BBC

BBC

BBC+LOGO+011

Post Top Ad

Monday, April 11

demo-image

முத்துப்பேட்டை அருகே ECR சாலையில் மினி வேன் மோதி பைக்கில் சென்ற கணவன் மனைவி பலி!

Responsive Ads Here
20160411020702

ஏப்ரல் 11: முத்துப்பேட்டை அருகே ECR சாலையில் மினி வேன் மோதி பைக்கில் சென்ற கணவன் மனைவி பலி! 
ஆத்திரம் அடைந்த மக்கள் சாலை மறியல் போராட்டம். முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் 1 மணிநேரம் போக்கு வரத்து பாதிப்பு. 
முத்துப்பேட்டை அடுத்த கீழநம்மங்குறிச்சி ஆதி திராவிடர் தெருவைச் சேர்ந்தவர் குப்பன் மகன் கல்யாணசுந்தரம்(45). இவரது மனைவி ஜெயா(40). கணவன் மனைவி இருவரும் ஒரே பைக்கில் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள அவர்களது உறவினர் வீட்டில் பிறந்தநாள் விஷேசத்திற்கு சென்றுவிட்டு நேற்று மதியம் கிழக்கு கடற்கரை சாலை பின்னத்தூர் வளைவு வி.ஏ.ஓ.அலுவலகம் அருகே வந்துக் கொண்டிருந்த போது முத்துப்பேட்டையிலிருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி பழங்கள் ஏற்றி சென்ற மினி வேன் எதிர்பாராத விதமாக கணவன், மனைவி சென்ற பைக் மீது மோதிவிட்டு  சாலை ஓரம் உள்ள மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. 
இதில் தூக்கி வீசப்பட்ட கல்யாணம் சுந்தரம் மற்றும் அரவது மனைவி ஜெயா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு திரண்ட அவர்களது உறவினர்களும் சுற்று வட்டார கிராமத்தைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதனால் திருத்துறைப்பூண்டி-முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்கு வரத்து தடைபட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த திருத்துறைப்பூண்டி டி.எஸ்.பி.கண்ணதாசன், முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் சாலை மறியல் ஈடுப்பட்ட மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி மக்களை அங்கிருந்து அப்புரப்படுத்தினார்.
பின்னர் போலீசார் பலியான கல்யாண சுந்தரம் - ஜெயா ஆகிய கணவன் மனைவி இருவரது  உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து எடையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மினி லாரி ஓட்டி வந்த பேராவூரணியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் டிரைவர் சிரஞ்சீவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad