முத்துப்பேட்டையில் இரவோடு இரவாக அரசு பள்ளி வகுப்பறை கட்டிடம் இடிப்பு. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Tuesday, April 12

முத்துப்பேட்டையில் இரவோடு இரவாக அரசு பள்ளி வகுப்பறை கட்டிடம் இடிப்பு.


ஏப்ரல் 12: முத்துப்பேட்டையில் இரவோடு இரவாக அரசு பள்ளி வகுப்பறை கட்டிடம் இடிப்பு. 
முத்துப்பேட்டை அருகே அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் அரசு பள்ளி வகுப்பறை கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை தர்காவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 2 வகுப்பறை கொண்ட ஒரு பழமையான வகுப்பறை கட்டிடம் இருந்தது. இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சென்ற பெற்றோர், பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியைடைந்தனர். ஏனெனில் அந்த பழமையான பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்ட போது, முறையான பதில் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து உயர் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து பொதுமக்கள் விசாரித்ததில், இந்த வகுப்பறை கட்டிடத்தை அதிகாரிகள் துணையுடன் அப்பகுதியை சேர்ந்த ஒப்பந்தக்காரர் ஒருவர் பள்ளியின் பின் பக்க சுற்றுச்சுவரை இடித்து விட்டு அவ்வழியாக இரவோடு இரவாக ஜேசிபி இயந்திரங்களை கொண்டு வகுப்பறை கட்டிடத்தை இடித்துள்ளனர். மேலும் வகுப்பறை கட்டிடம் இருந்த பின்பக்க சுற்றுச்சுவரும் இடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் வீரமணி கூறுகையில், பள்ளி வளாகத்தில் இருந்த 2 வகுப்பறை கொண்ட பழமையான கட்டிடம் பழுதடைந்திருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென வகுப்பறை கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதனால் நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். பிறகு சிறிது நேரத்தில் யூனியன் ஆபிசில் சொன்னதாக கூறி யாரோ சிலர் வந்து கட்டிட கழிவுகளை வாகனத்தில் அள்ளி சென்றனர் என்றார்.
இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், பள்ளி வகுப்பறை கட்டிடம் இடிப்பது குறித்து எந்த அனுமதியும் பெறவில்லை. இது குறித்து கலெக்டருக்கு தகவல் தெரிவித்துள்ளோம். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சுப்பிரமணியன் கூறுகையில், இது குறித்து இது வரை எந்த வித தகவலும் வர வில்லை என்றார்.
அப்பகுதி திமுக ஒன்றிய கவுன்சிலரின் கணவர் ஜாம்பை கல்யாணம் கூறுகையில்: எந்த வித முன் அனுமதியும் இல்லாமல் அத்து மீறி ஒரு அரசு பள்ளி கட்டிடத்தை இடித்து தரை மட்டமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து கேட்டால் யாரும் முறையான பதில் தரவில்லை. இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here