மார்ச் 08: முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டராக இருப்பவர் ராஜ்குமார். இவர் 2013-ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் டெக்கான்பூர் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி முகாமில் இந்திய அளவிலான தீவிரவாத எதிர்ப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் குறித்த ஒத்திகைப்பயிற்சி நடைபெற்றது. இதில் அவர் பங்கேற்றார். அதே போல் அதே முகாமில் குறிப்பார்த்து சுடுதல், மணல் மூட்டையினை சுமந்தபடி இலக்கை நிற்னயித்த நேரத்திற்குள் அடைதல் மற்றும் 20 தடைகள் கொண்ட பாதையை தடைதாண்டி அடைதல், தீவிரவாதியைக் கண்டறிந்து முற்றுகையிட்டு சுற்றி வளைத்தல்(ஸ்மெல் டீம் ஆப்ரேஷன்) போன்ற ஆறு வகை பயிற்சிப் போட்டி நடைபெற்றது. இதில் அனைத்திலும் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்றார். அதற்காக சமீபத்தில் சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமாருக்கு விருது மற்றும் ரொக்க பரிசு வழங்கினார். விருது பெற்ற இன்ஸ்பெக்டர் ராஜ்குமாருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர் மற்றும் முத்துப்பேட்டை .org , முத்துப்பேட்டை பிபிசி இணையதளம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
தகவல்: நிருபர் மு.முகைதீன் பிச்சை
No comments:
Post a Comment