மார்ச் 07: தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தஞ்சை வாலிபர், திருச்சி விமான நிலையத்தில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.
சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு கடந்த வாரம் டைகர் ஏர் வேஸ் விமானம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்களை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு கிரமங்கலத்தை சேர்ந்த வேலு கண்ணு மகன் ஆத்மநாதனின் (32) ஆவணங்களை சோதனை செய்த போது, இவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பாஸ்போர்ட் முடக்கப்பட்டது தெரியவந்தது. ஆத்மநாதனிடம் விசாரித்த போது, 2003ம் ஆண்டு பட்டுக்கோட்டை போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமீனில் வெளியே வந்த ஆத்மநாதன் வழக்கு தொடர்பான நீதி மன்ற நடவடிக்கையில் ஆஜராகாமல் சிங்கப்பூர் தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து நீதிமன்றம் ஆத்மநாதனை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. இதையடுத்து இமிகிரேஷன் அதிகாரிகள் அவரை கைது செய்து ஏர்போர்ட் போலீசில் ஒப்படைத்தனர்.
No comments:
Post a Comment