மார்ச் 11: PROCESSED MEAT எனப்படும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை அதிகம் உண்பது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும் என்பதற்கு ஆதாரம் வெளிவந்துள்ளது. ஐரோப்பாவில் சுமார் ஐந்து லட்சம் மக்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் பதப்படுத்தப்பட்ட இறைச்சி உண்பதால் 30 பேரில் ஒருவர் அகால மரணமடைய நேரிடுகிறது என்று BMC மெடிசின் என்ற ஆய்வறிகை இதழில் வெளியாகியுள்ளது, தற்காலத்தில் அதிகமாக பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை பர்கர்கள் மற்றும் புரோஜன் சாண்டுவிட்சுகளில் பயன்படுத்தப்படுகிறது.
தினசரி 20 கிராம்கள் இறைச்சி என்ற அளவுக்கு அல்லது ஒரு துண்டு இறைச்சி என்ற அளவில் பதப்படுத்தப்பட்ட இறைச்சி உண்பதைக் கட்டுப்படுத்துவது, ஓராண்டில் பல ஆயிரம் மரணங்களைத் தடுக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். பதப்படுத்தபட்ட இறைச்சிகளை பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் உப்பு மற்றும் ரசாயனப் பொருட்கள் இருதயக்குழாய் நோய்கள் மற்றும் புற்று நோய்கள் ஏற்படும் ஆபத்தை அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment