முத்துப்பேட்டை இ. யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் டில்லி பயணம். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Monday, March 11

முத்துப்பேட்டை இ. யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் டில்லி பயணம்.


மார்ச் 11: முத்துப்பேட்டை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் மத்திய ரயில்வே துறை அமைச்சர் முகல் ராய் அவர்களை சந்திந்து, திருவாரூரிலிருந்து காரைக்குடி வழி அகல ரயில் பாதை திட்டத்தின் பணிகளை தூரிதமாக செயல்படுத்த வேண்டும், முத்துப்பேட்டை பேரூராட்சியில் 30.08.2012 அன்று நடைபெற்ற தீர்மானப்படி பங்களா வாசலிலிருந்து சேத்துக்குளம் வழியாக தெற்குகாடு மாரியம்மன் கோவிலுக்கு செல்ல ரயில்வே பாதைக்கு கீழ் சுரங்க பாதை வழி அமைக்க வேண்டும், மற்றும் முத்துப்பேட்டை பேரூராட்சி எல்லையில் உள்ள கால்நடை மருத்துவமனை ரயில்பாதைக்கு வடக்கே உள்ளதால் கால்நடைகள் ரயில்பாதையை கடந்து செல்ல முடியாத காரணத்தினால் ரயில் பாதைக்கு கீழே சுரங்க பாதை வழி அமைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை மனுவாக எழுதி அமைச்சரிடம் கொடுப்பதற்காக 11.03.2013 காலை 6.30 மணியளவில் முத்துப்பேட்டையிலிருந்து புறப்பட்டனர்.
பயணக்குழுவினரை வழியனுப்பும் நிகழ்ச்சி முத்துப்பேட்டை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் 10.03.2013 இரவு 7.30 மணியளவில் நடைபெற்றது. முஸ்லிம் யூத் லீக் மாநில துணை செயலாளர் வழக்கறிஞர் அதிரை. முனாப் அவர்களும், தஞ்சை மாவட்ட பிரதிநிதி அதிரை. எம்.ஆர். ஜமால் அவர்களும் வழியனுப்பி வைத்தார்கள்.
பயணக்குழுவில் இடம் பெற்ற முத்துப்பேட்டை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் விவரம் :
1. முகைதீன் அடுமை – திருவாரூர் மாவட்ட செயலாளர்
2. எம். முகமது அலி – மாவட்ட துணை தலைவர்
3. கோல்டன் தம்பி மரைக்காயர் – நகர தலைவர்
4. அபு ஹனீபா – செயலாளர்
5. எ.எஸ்.என் முகமது இப்ராஹிம் – பொருளாளர்
6. ஷேக் கமால் முகைதீன் – இளைஞரணி செயலாளர்
7. ஹாஸ் பாவா – தொழிலாளர் அணி செயலாளர்
8. ஹெச். ஹாஜகான் – துணை செயலாளர்
9. அசன் ராஜா – துணை செயலாளர்
10. சையது கனி – செயற்குழு உறுப்பினர்
11. முஹம்மது பாரூக் – செயற்குழு உறுப்பினர்
12. லியாகத் அலி – செயற்குழு உறுப்பினர்









NEWS PARTNER MUTHUPET.ORG

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here