மார்ச் 09: திருவாரூர் மாவட்டத்திலேயே முத்துப்பேட்டையில் தான் அதிகபட்சமான மழை கடந்த இரண்டு தினங்களாக பெய்ந்து வருகிறது. நேற்றும் வழக்கம்போல் மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆசாத் நகர் சுலைமான் என்பவரது வணிக வளாக கட்டடித்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. சத்தத்தை கேட்ட பொதுமக்கள் அலறியடித்து ஓடியதால் அனைவரும் தப்பித்தனர்.
இந்த நிலையில் நேற்றுக்காலை முத்துப்பேட்டை மரைக்காயர் தெரு முஜிபுர் ரஹ்மான் என்பவரது வீடு மழைக்கு இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்கிடையே அவரது மகன் அப்துல் அஜிஸ்(12) அக்கா மகள் நஸ்ரின்(14) சிக்கினர் சத்தத்தை கேட்ட பொதுமக்கள் திரண்டு மீட்டு இருவரையும் காப்பாற்றினர். காயமடைந்த இருவரையும் முத்துப்பேட்டை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவ இடத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் பன்னீர் செல்வம் பேரூராட்சி தலைவர் அருணாச்சலம் முன்னாள் பேரூராட்சி தலைவர் கார்த்திக் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர்.
NEWS PARTNER: முத்துப்பேட்டை.org
No comments:
Post a Comment