நடுவானில் "EMIRATES" விமானத்தின் கதவு உடைந்ததால் பயணிகள் பீதி! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Monday, February 18

நடுவானில் "EMIRATES" விமானத்தின் கதவு உடைந்ததால் பயணிகள் பீதி!



பிப்ரவரி 18: நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவு உடைந்ததால் பயணிகள் பீதியடைந்தனர்.
கடந்த 11ஆம் தேதி, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து ஹாங்காங்குக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (Emirates) விமானம் சென்று கொண்டிருந்தது. விமானம் 27,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, அதன் அவசர கால கதவு ஒன்று திடீரென உடைந்தது.

அப்போது குண்டு வெடிப்பது போன்ற சத்தமும் அதிக அளவில் காற்றும் உள்ளே புகுந்தது.

இதனால் பயணிகள் பீதியடைந்தனர். இது குறித்து பணிப்பெண், விமானிகளுக்கு தகவல் தெரிவித்தார். இந்த ஆலோசனைக்கு பின், விமான பணியாளர்கள் தலையணை மற்றும் போர்வைகளை வைத்து கதவில் ஏற்பட்ட ஓட்டையை அடைத்தனர்.

எனினும், விமானம் அவசரமாக அருகில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்கப்படவில்லை. திட்டமிட்டபடி ஹாங்காங்கில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

தகவல்: நல்லநண்பன்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here