முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் ரகளை. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Monday, February 18

முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் ரகளை.


முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் ரகளை

பிப்ரவரி 18: முத்துப்பேட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 2000 த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் அடிக்கடி மாணவர்களிடையே மோதல்கள் நடப்பது வழக்கமான ஒன்றாகும். இதனால் ஆசிரியர்கள், ஆசிரியைகள் பணியாற்ற விரும்பாத காரணத்தால் பலர் வேறு ஊர்களுக்கு மாற்றலாகி சென்று விட்டார்கள்.
இதனால் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது, மேலும், பள்ளியில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி இல்லை, மேலும், பள்ளியின் சுற்று சுவர் சேதமாகி திறந்த நிலையில் இருப்பதால் சமூக விரோதிகளின் கூடாரமாக காட்சி அளிக்கிறது. இரவு நேரங்களில் சமூக விரோதிகள்; மது பான பாட்டில்கள் தண்ணீர் பாக்கெட் போன்றவற்றை அங்கு போட்டு விட்டு செல்கிறார்கள். இதனால் அசுத்தமாக பள்ளி வளாகம் காட்சியளிக்கிறது. இதனை காரண காட்டி மாணவர்கள் பலர் பொருட்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டு வந்தனர், இந்த நிலையில் 18.2.13 காலை பள்ளி துவக்கியதும் 12 ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் வகுப்பு மேஜை நாற்காலிகளை உடைத்தனர். மேலும், ஒரு ஆசிரியைரை செல் போனில் படம் பிடித்து மிரட்டி பெரும் ரகளையில் ஈடுபட்டனர். இதனை கண்ட ஆசிரியர்கள் திரண்டு மாணவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனை ஏற்காத மாணவர்கள் மேலும் பல வகுப்பறையில் உள்ள பொருட்களை உடைத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் முத்துப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையில் போலீஸார் பள்ளிக்கு விரைந்தனர். இதனை அறிந்த மாணவர்கள் பள்ளியின் பின்பக்கமாக உள்ள வழியில் குதித்து தப்பி ஓடினர். இதனால் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

NEWS PARTNER MUTHUPET.ORG

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here