ஜுலை 11: அமெரிக்காவின் பிரபல இஸ்லாமிய பிரச்சாரகர் யூசுஃப் எஸ்டஸ் இவ்வாண்டிற்கான சிறந்த இஸ்லாமிய ஆளுமையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
16-வது துபாய் புனித திருக்குர்ஆன் விருதுக்குழு இவரை சிறந்த இஸ்லாமிய ஆளுமையாக தேர்வுச் செய்துள்ளது. இத்தகவலை நேற்று மாலை தேர்வுக்குழு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
உலகின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த 10க்கும் மேற்பட்ட ஆளுமைகளில் இருந்து யூசுஃப் எஸ்டஸ் தேர்வுச் செய்யப்பட்டுள்ளார்.
மேற்கத்திய நாடுகளில் இஸ்லாமிய பிரச்சாரம் மற்றும் பரப்புரைச் செய்ததில் அவர் அளித்துள்ள சேவைகளை கருத்தில் கொண்டு இவ்விருதிற்கு தேர்வுச் செய்ததாக துபாய் புனித திருக்குர்ஆன் விருதுக் கமிட்டியின் நிர்வாக குழு உறுப்பினர் இப்ராஹிம் பூமில்ஹா கூறினார்.
1944-ஆம் ஆண்டு அமெரிக்காவின் டெக்ஸாஸில் ப்ரொட்டஸ்டாண்ட் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த யூசுஃப் எஸ்டஸ், 1991-ஆம் ஆண்டு இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தீவிரமாக இஸ்லாமிய பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
No comments:
Post a Comment