ஜுலை 15: கிட்டத்தட்ட 10 மில்லியன் முஸ்லிம்களை இன அழித்தொழிப்புச் செய்ய மியான்மரில் சதித்திட்டம் தீட்டப்பட்டு முயற்சிகள் நடப்பதாக அந்நாட்டைச் சார்ந்த முஸ்லிம் இளம் பெண்மணி ஆயிஷா ஸூல்ஹி கூறுகிறார். எகிப்தில் உள்ள ஷரீஆ கல்லூரியில் பயின்று வருகிறார் ஸூல்ஹி.
முஸ்லிம்களுக்கு எதிராக கொடூரங்களை குறித்து ஆயிஷா ஸூல்ஹி அல் வதனுல் மிஸரிய்யா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியது: “பெளத்த மதத்தைச் சார்ந்த பயங்கரவாதிகள் அங்குள்ளமு ஸ்லிம்களுக்கு மதுபானம், பன்றி இறைச்சி அல்லது மரணம்- இதில் எதை தேர்ந்தெடுக்கப் போகின்றீர்கள் என்று சாய்ஸ் வழங்குகின்றனர். ஆனால், முஸ்லிம்கள் மரணத்தை தேர்ந்தெடுக்கின்றார்கள்.
மியான்மரில் முஸ்லிம்கள் அனுபவிக்கும் கொடுமைகளை கண்டும், கேட்டும் நான் நரக வேதனையை அனுபவிக்கிறேன். எனது நாட்டைச் சார்ந்தவர்கள் கூட்டாக கொலைச் செய்யப்படும் பொழுது எவ்வாறு நாம் மெளனமாக இருக்கமுடியும்?
மியான்மர் முஸ்லிம்கள் இரத்த சாட்சிகளை கொடையாக வழங்குகின்றார்கள் என்பதுதான் அபிமானத்திற்குரிய செய்தியாகும்.
பல தினங்களாக நான் எனது குடும்பத்தினரை தொலைபேசி வழியாக தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன். ஆனால்,பெளத்தர்களின் தாக்குதலில் அவர்களுடைய வீடுகள் தகர்க்கப்பட்டு பங்களாதேசுக்கு அகதிகளாக அவர்கள் சென்றுள்ளனர். எனது சில உறவினர்களும், நண்பர்களும் கொடூரமாக கொலைச் செய்யப்பட்டுள்ளனர். ஏராளமான பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடுமை இழைக்கப்படுகின்றனர்.” இவ்வாறு ஆயிஷா ஸூல்ஹி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment